பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமகள் 251 ' அண்ணு என்று வீறிட்டவாறே அவன் கைகளைப் பற்றினுள் சுமதி: சுமதி, என்னம்மா, நான் ஏதாவது உளறினேன...? ' திடுக்கிட்டவாறு கேட்டான் சோமு. " அப்பா என்று என்னமாக தீனமாக அலறிய்ை நீ... என் குலையே நடுங்கி விட்டதண்ணு...' உள்ளத்தில் வேகமாக வந்த பழைய நினைவுகள் அம்மா அவை. சுதந்திரம் பெற்ற ஒராண்டுக்குள் நிகழ்ந்த ஊழிக் கூத்து...அன்று ஜகத்தை அழிக்க உறுதி கொண்ட சாதிச் சண்டை, மதச் சண்டை. அந்த இம்சைப்போரில், அருவருப் பான கீழ்த்தரமான குழப்பத்தில், நம் தந்தையைப் பலி கொடுத்து, அந்தத் தீமை செய்த கொடுமைகளை அனுபவித்தவள் நம் தாய்...' சோமுவின் குரலில் ஒலித்த சோகமான அமைதி பாவம் பளிச்சென மாறிவிட்டது. சு...ம ..தி கடும் முரட்டுத் தனம் ஒலித்தது, அந்த மூன்றெழுத்தில். சுமதி ! என் ரணத் தில் ரத்தத் துளிகள் கசியும் வேதனை இப்போது, நான் கண்ட காட்சி...நீ நாதிரா என்று அழைக்கப்படும் போது என் காதில் காய்ச்சி ஊற்றிய நாராசம் என்னைச் செவிடாக்காமல் விட்டது குறித்து ஆச்சரியப் படுகிறேன்...' உள்ளத்தில் புதைந் திருந்ததை வெளியே இழுத்த திகிலோடு அவளை நோக்கின்ை: தன் சொற்களில் ஒலித்த ரெளத்திரத்தை எண்ணி அவன் கண் களே கலங்கின. தெருவின் நாற்சந்தி வந்தது. வலது கை ஒரமாகத் திரும்பி இருவரும் நடந்தனர். நாற்சந்தியின் கடிகாரம் மணி ஒன்பது காட்டியது. நகரம் விழிப்புற்று சுறுசுறுப்பாக மாறி ஏறும் வெய்யிலில் களைப்படையக் காத்திருந்தது. அம்மா பூஜை செய் யும் நேரம் இது! எந்த நிமிடமும் அம்மா, அம்மா’ என்று வளர்ந்து விட்ட நிலை அவனுக்கு. எல்லாம் அம்மாவுக்காகத் தான். அவளுக்கு ஆகாதது, அவனுக்கும் ஆகாது. அவளுக்குப் பிடித்தவை, அவனுக்கும் வெகு பிரியமானவை. வாசல் இரும்புக் கிராதியைக் கடக்கும் போதே உள்ளே ஊதுவத்தியின் மணமும், உள்ளடங்கும் இனிமை பொங்கும் குரலில் பக்திக் குழைவு கலந்து பாடும் தாயின் குரலும் துல் லியமாகக் கேட்டது. முன் வாயிற் படியோரம் இருவரும் மயங்கி நின்றபோது, தாயின் குரலின் சோகம் அவன் நெஞ்சை வெட்டியது. அந்தக் கானத்தின் மொழிகள் சுமதியின் நெஞ்சை கிளுகிளுக்க வைத்தன. -