பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 வந்தே மாதரம் ஈஸ்வர அல்லா தேரேநாம் வப்கோ சன்மதி தேபகவான் ராம ராம ஜய ராஜா ராம் ராம ராம ஜய சீதாராம்... * *jibцрт 1 **

  1. * அம்மா ! ?? ஒரு குரலில் விதிர்ப்பு! ஒரு குரலில் களிப்பு !

அன்னை சட்டென விழித்துக் கொண்டாள். மைந்தன் உணர்ந்து கொண்ட துயரத்தை, அப்படியே புன்சிரிப்பாக்கி, அதைப் பார்வை மாலையாக அவனுக்குச் சாத்தினுள். அவன் நிறைவோடு அவளை உற்று நோக்கிச் சிரித்தான். பூஜை செய்கிருயா, அம்மா ? ' என்று அர்த்தமில்லாமல் கேட்டான். சுமதி எதுவுமே பேசாதது சோமுவிற்கு உறுத்திற்று. அவள் வேற்றுமையாகி நிற்பதுபோலக் குற்றம் சாட்டும் பாவனையில் அவளைப் பார்த்தான். சுமதி ! டோய் அண்ணுவிற்கு டிபன் எடுத்து வை என்ருள் அம்மா எனக்கு ஒரே அலுப்பு, அம்மா அவளின் கீழ்ப்படி யாமை செல்லமாக மொழிந்தது. சட்டெனத் தாயின் முகத்தைக் கண்டு திடுக்கிட்டான் அவன், கோபம் சீறும் விழிகள். அவள் பார்வையில் தங்கை யின் மீது மட்டும் என்றும் அன்பு கனிந்து பொங்கியதில்லை. எப்போதுமே அதில் சுரீரென எரியும் தீப்போன்ற சுடர் தெறித்து மங்கி மறைவது போலத்தான் தோன்றும். இந்தப் பார்வையைத் தினமும் பார்த்துப் பயந் தெளிந்தவளாயிற்றே சுமதி ! அவள் எழத் தயாராக இல்லை. அண்ணு கோபித்துக் கொண்டதை எல்லாம் வைத்து, அம்மாவிடம் செல்லமாகக் கீழ்ப்படிய மறுத்துப் பிடிவாதம் செய்தாள். நலிந்த உருவான அம்மா, அவளிடம் எப்போதும் போலவே ஒட்டியும், ஒட்டா மலும் பெண்ணென்ருல் இப்படியா? எழுந்திருடி, நானே வருகிறேன். இரண்டு பேருமே சாப்பிடுங்கள்’’ என்று முன் வந்தாள். சுமதியின் பிடிவாதத்தை, அம்மா இப்படிப் பெரும் போக்காக விட்டுத்தான், இப்படித் தான் தோன்றியாகி விட் டாளோ அவள்? " . . . அம்மா இரண்டு தட்டுக்களில் இட்டிலி வைத்துவிட்டு, தானும் ஒரு தட்டில் இட்டிலி வைத்துக் கொண்டாள். மூவரும் விண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்.