பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமகள் 353 ' இன்றைக்கு மோர்க்குழம்புதானேம்மா ? என்ருன் சோமு. இல்லை, மோர்க்குழம்புதான் சுமதிக்குப் பிடிக்காதே... ’’ உதைத்துவிட்ட அந்தக் குழந்தையை எடுத்தணக்கும் பரிவு அவள் குரலில், " சுமதிக்குப் பிடித்ததெல்லாம் செய்வதானுல் அது உன்னல் ஆகாதும்மா... ' என்ற சோமுவை எதிர்த்து அண்ணு சும்மா இருக்கமாட்டாய்... ' என்று குறுக்கிட்டாள் சுமதி. சோமு அதை லட்சியம் செய்யவில்லை. ' சு...ம...தி என்று இல்லே நீ பெயரிட்டாய். அது நாதிராவாகிவிட்டது அம்மா. அணுர்க்கலி கதை ஞாபகம் இருக்கிறதா அம்மா உனக்கு ? அந்த சலீமின், அர்ைக்கலியின், பெயர்தான் நாதிரா. இப்போது பள்ளி நிர்வாகியின் மகன் சலீமுக்காக இவள் பெயர் நாதிரா ஆகிவிட்டதம்மா... ' சோமு எதிர்பார்த்தபடி அம்மா எடுத்த விள்ளலைத் தயங் கவே செய்தாள் ஆல்ை அடுத்த கணமே ஆட்டம் காணுத உறுதியாக நிலைத்தன கரங்கள். அவள் மிகவும் கஷ்டத்தோடு தன் முகத்தைக் கனிவாக்கிக் கொண்ட முயற்சி அது. ' அதைப் பற்றி அப்புறமாகப் பேசலாமா, சோமு... ! " அவள் குரலில் செயற்கையான நிறைவு ! சிட்டுக்குருவியின் இறகுகளைப்போல் படபடத்த சுமதியின் உள்ளம் சில்லிட்டு உறைந்தது. அந்தக் கணத்தில் எதுவுமே பெரிதாகாமல், அன்னையின் பரிவே பெருகி, அவள் நெஞ்சு நிறைந்து அவளை விம்ம வைத்தது. 'அம்மா' என்று உட் கார்ந்த வாக்கிலேயே தாயின் மடிமீது முகம் பதித்துத் தேம்பித் தேம்பிக் கதறினுள் அவள். அன்னை அவளைத் தேற்றவும் இல்லை, கடியவும் இல்லை. மகனை அவள் நோக்கவுமில்லை, அதிர்ந்து உட்கார்ந்து விடவுமில்லை. மகள் மடியில் கதற, மகன் எதிரில் குமுற, ஒரு தாய் சலனமின்றி உண்டு கொண்டி ருக்கிருள்! பூகர்ப்பத்தில் எரிகுழம்பை வைத்துக்கொண்டு நதி களையும், வளங்களையுமே காட்டிக்கொண்டிருக்கும் பூமித்தாய் தான இவள்? அவள் எப்போது குமுறுவாள் ! தாயின் முன் தனக்குத்தான் குன்றி அடி பணிந்து சிறுமியாகிவிட்ட வெட்கம். ஏன் ? நிமிர்ந்தான் சோமு. அவள் முகத்தில் இத்தனை நாள் நிலவிய சாந்திக்குப் பதில் விதிர்ப்பு: இந்த விதிர்ப்பை இதற்கு முன்பு எப்போதோ கண்ட நினைவு... அந்தத் தவிப்பில் விடு படாத பயங்கரமான, நினைத்தால் நெஞ்சு கலங்கும் சீர் குலேவு... அவன் வயிற்றில் தீக்கங்குகள் உறையும் வேதனை பீறிட 'அம்மா’’ என்ருன். -