பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&5委 வந்தே மாதரம் அவள் பேசவில்லை: மனநிழலில் ஒதுக்கம் கண்ட நினைவின் கூர்மை உறுத்தும் வேலாகிவிட்டதா? மாண்டுவிட்ட தந்தை நினைவு வந்துவிட்டதா அவளுக்கு ? சுமதி ! சுமதியின் தோழி நீலாவின் குரல். அம்மா கமதியை எழுப்பினள். 'போ முகத்தை நன்ருகத் துடைத்துக்கொண்டு போ. நம் துயரங்களை எல்லாம் பிறர் உணரும்படிவைக்காதே. உன் தோழி நீலா போலிருக்கிறதே, அங்கேயே உட்கார்ந்து பேசுங்கள்... ' சுமதி முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டு நகர்ந்தாள். அவள் தட்டில் விண்ட இட்டிலிகள், சோமு மறுபடியும் அம்மா வைக் கூர்ந்து நோக்கினன். நீ நினைப்பது சரிதான், சோமு. என்றுமில்லாத விதமாக உன் தாய் குழம்பிக் கிடக்கிருள். ஆனல் எல்லாவற்றிற்கும் சேர்த்து இன்று நீயே ஒரு முடிவு காட்டிவிட்டாய், சோமு... ' ' முடிவா...? என்னம்மா சொல்லுகிருய் நீ... ? ' முடிவுக்கு வராமலேயே, முடிவுகள் கிளைப்பதுண்டு சோமு! நீ உன் தங்கையை என்ருவது ஒரு நாள் பிறனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியவன்தானே... ?" அம்மாவின் கண்களில் பெருகிய நீர் மனமூடி திறந்துகொண்டாற் போல் உருப்புரியா ஓர் உண்மையை அவனுக்கு உணர்த்த முயல்கிருளோ. ஏதோ உள் பொருள் புதைந்து, அதை வார்த்தை நிறைய எடுத்துக் கூற முடியாத தயக்கம் ஏன் அவள் வார்த்தைகளில்? அடுப்பின் புகையெல்லாம் கவிந்து கொண்டு விட்டது. எரிந்தும், எரியாமல் கிடந்த பச்சை விறகு புகையாய்க் கப்பிச் சூழ்ந்தது. அந்தப் பின்னேட்டத்தில் கிளைக்கும் சின்னஞ் சிறு சுடர் முகமாய் அம்மாவின் முகம், ஒளி மங்கி, துயர் தேங்கி நிற்கிறது. சோமு விதிர்த்தான். இதே முகம், துயர்...நீண்டு நீண்டு நெஞ்சையழிக்கும் துயரிடையே அன்று. 1 அன்று..." சட்டென சோமு நினைத்த அன்று அம்மா வின் வாயில் சொற்களாக வந்தது. ' அன்று' என்று அந்த நாளைக் குறிக்கும் போதெல்லாம், இந்தச் சோகமான பீறிட் டோடும் வேதனை கிளர்ந்து சோமுவின் நெஞ்சை வெட்டும். இதோ இப்போதும் அம்மா' அன்று' என்று விட்டு உருகி. நிற்கிருள்...மேலே தொடரவில்லை. - - புகை போன்ற தூரமான ஒரு பழைய மங்கிய காட்சியில்... இதோ நிற்கும் துயரத்தோடு கைகள் கட்டிலில் கட்டப்பட்டு ஆடைகள் கிழித்து அரைகுறையான அலங்காரத்தோடு.