பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமகள் 255 அடுத்த வீட்டு முக்கர்ஜி பள்ளிக்கூடத்திற்கு வந்து சோமுவை அழைத்துக்கொண்டு வந்தபோது, தந்தை பலியாகிவிட்ட செய்தியைக் கூறியதும் அவனே வீட்டினுள் அழைத்து வந்தார். அவரைக் கண்டதும் அம்மா வீறிட்டலறிஞள். அவர் அம்மா வின் கட்டுக்களை அவிழ்த்தார். உடனே அவள் சோமுவைக் கட்டிக்கொண்டு ஓ'வென்று கதறினுள். முக்கர்ஜி முகத்தை மூடிக்கொண்டு கேவினர். ஒரு நண்பனே தன் தோழனின் மரணத்தைப் பற்றி, அவன் மனைவியிடம் கூறும் துர்ப்பாக்கியத் திற்கு வருந்தினர் அவர். 'அன்று... முக்கர்ஜி உன்னைப் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வந்து, கட்டிக் கிடந்த என்னை விடுவித்து விட்டு ' மறுபடியும் அம்மாவின் தழதழத்த குரல் பொங்கும் உஷ்ண நீரோட்டமாகப் பீறிட்டது. ' நான் தவித்துத் திணரும்போது அவர் வருமுன் நான் என்னைக் கொன்று கொள்ள நினைத்த போது, அதை முக்கர்ஜி புரிந்து கொண்டார். அவர் தணி வான குரலில் தற்கொலைக்குத் துணியாதீர்கள் அம்மணி. உங்கள் செல்வ மகன் தந்தையற்றவன்... ஆம் ! என்னெதிரி லேயே அவர் தாக்கப்பட்டு மாண்டார். அப்போது உயிர் பெரிதென ஒடி வந்தேன். இப்போது இதைச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது, நானும் தாக்குண்டு இறந்திருக்க லாம் என்று தோன்றுகிறது அம்மணி என்ருர். என் துயரத் திலும் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். அவர் மட்டும் உன் தந்தை இறந்தசெய்தியைக் கூற வராவிட்டால்...நான் உன்னை அளுதையாக்கிச் சென்றிருப்பேனடா சோமு. ’’ எத்தனை நாளோ கட்டிக்காத்த துயரம் கரை மோதியது. சோமு விக்கித்து விட்டான்.

நான் கோ வென்று கதறினேன். அந்தக் கணம் சோமு... நான் உன்னைத்தவிர என் சகலத்தையும் இழந்தேன். உலகத்தில் இனி என்ன எனக்கு ஈர்ப்பு? உன்னைத் தக்கவிடத் தில் ஒப்புவித்துவிட்டு, நான்... '
  • அம்மா!' என்று வீறிட்டான் சோமு.

' அதை நினைத்து இப்போது ஏன் அஞ்சுகிருய் சோமு ? என்ருவது ஒரு நாள் உனக்குத் தெரிய வேண்டிய உண்மை கள்தான் இவை என்று கட்டிக் காத்து வந்தேன். இன்று... அதற்குறிய நேரம் வந்துவிட்டது. அப்போது நீ சிறுவனல் லவா...? தீமை செய்த கொடுமைகளை அநுபவித்தவருள் முதன் மையானவர்கள் தாய்மார்கள். பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்பி விட்டு, கணவனை அலுவலுக்கனுப்பிவிட்டு, சட்டென தன்னைப் பலி கொடுத்தவர்கள். கண் சிமிட்டு முன் மூண்டெமுந்த கன