பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 வந்தே மாதரம் வில் வெறுப்பு. குரோதம், சதை, இரத்தம் இவைகளின் ஆட்சி வியூகமிட்டு விட்டது. கொடுமைக்குக் கொடுமை, பழிக் குப் பழி என்று பாதிக்கப்பட்டவர்களும் வெகுண்டெழுந்தனர். அறிவுக்கு, அறிவில்லை, அன்புக்கு அன்பில்லை. புன்னகையே உருவாக, சத்தியமே உறுதுணையாக நின்ற காந்திஜீ எந்த இரு பெரும் சமுதாய நலத்திற்குப் பாடுபட்டாரோ அதே இருவரும் கை கலந்தார்கள். வெற்றி அல்லது வீர மரணம் என்பதல்ல அது. அழிவு அல்லது மானக்கேடு.ஆண்களேக் கொன்று குவித்து, பிள்ளைகளை வெட்டியெறிந்து, பெண்களை அவமதித்து...அன்னையர் குலத்தைப் பழித்ததால் மாருத சாபம் பெற்ற கரங்கள்... வீடெரித்து, மங்கையர் நெஞ்செரித்து, மாண்ட உடலெரித்து... மாளாத சிசுக்கள் பெற்ற தாய்மார் மட்டும் எஞ்சிய மக்களோடு நெஞ்சு துடித்து நிற்க... இனி சாவா, வாழ்வா? ஏன் இந்தக் கேள்வி? மானமழியின் தானழியும் பாரதப் பெண்ணல்லவா? பின் தயக்கம் ஏன் ? ' " சோமு ! உனக்குத் தெரியாது. அன்று இந்த நாடு ஒரே ஒரு மனித பலத்தில், சத்தியத்தின் திருக்கரத்தில், சாத்வீகத் தின் இனிப்பில், தன்னை மறந்து கட்டுப்பட்டிருந்தது. அந்த எளிய புன்னகைக்கு நாற்பது கோடி மக்களும் கட்டுப்பட்டுக் கிடந்தபோது, நான் ஒரு பொருட்டா ? ஒரு முழ வேட்டி கட்டிய ஒருவரிடத்தில் அடி பணிந்த பாரதம் இது. அது சத்திய உபாசகம் ! அதையும் மீறி மூண்ட கனலில் ஈ, எறும்பு கடித்த நினைவாக, அதை ஒரு துர்க்கனவாக எண்ணி அன்னை யாக வாழுங்கள், அன்பு மனைவியாக வாழுங்கள், என்று அறிக்கை விடுத்தார். ஆங்காங்கே முளைத்த சின்னஞ்சிறு கலகங் களுக்காகக் காந்தி அண்ணல் அந்தந்தப் பிராந்தியத்திற்கும் பாதயாத்திரை வந்தார். அவர் புன்னகைக்கும், பொன்மொழிக் கும் கட்டுப்பட்டது கலகம். அது நின்றுவிட்டது. தீமை புரிந்த கரங்களெல்லாம், அவர் கால் துளசி ஒற்றி நின்றன. அன்பும், தருமமும் அழிந்த நெருப்பில் பலியான என் போன்ற வர்களும், அவரைக் கண்டு கதறித் துயர் தீர்ந்தோம். தோளுக் கும் நேஞ்சத் துணிவுக்கும் இடமற்ற மறப்போரில், மாதர்கட் கும், மழலைகட்கும் முதல் சுடுகாடாகிய அதர்ம வெறியில் சிக்கிவிட்டு மீண்டபோது மனப்பாரத்தை எல்லாம் கழட்டி அவர் பாதத்தில் வைத்தோம். ஏசுவைத் தொட்ட குஷ்ட ரோகிகள் நோய் தீர்ந்தாற்போல் அவர் பாதது.ாளிகளைத் தொட்டு ஒற்றிக்கொண்டதின் மூலம் மாசு களைந்து புனிதமானது போல் தோன்றியது. ' ... ' . - "...ஆனல்...' அம்மாவின் குரல் இப்போது சன்னமாக இழைந்து வந்தது. 'நான் மீட்புக் குழுவில் சேர்ந்து, உன் ளுேடு தமிழ் நாட்டுக்கு வந்த பின்தான் உணர்ந்தேன். எந்த