பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி 269 பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. தயங்கித் தயங்கிப் பயந்தபடி அந்தப் பையன் வாசல் திண்ணையின் துணைக் கட்டிக் கொண்டு உள்ளே வர மறுத்தான். ஏண்டாலே அடச் சீ...உள்ளே வாடா என்று இரைந் தார் வாசு செல்லம் முகத்தையே கேள்விக்குறி போல் தூக்கி வளைத்துப் பார்த்து, ' யார் இது? ' என்று கேட்டு வைத்தாள். இதுவா? தரித்திர நாராயணன் பெற்ற செல்வம் டீ, நம்ப பையன் இனிமே. நீதான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு நின்னுட்டே...நம்ப பையனுக்கு ஒரு துணை வாண்டாமா ? ’’ விளக்கடியில் படித்துக் கொண்டிருந்த தியாகு எழுந்து வந்தான். அவனுக்கு அம்மாவிடம் பயம். அப்பாவிடம் சலுகை யும், வாஞ்சையும் அதிகம். 'ஓ ! இவளு ! நம்ப அமாசியின் மகன். இவனுக்கு அப்பன் இல்லையே அப்பா, போன வருஷம் வெள்ளத்துலே காவேரி யோடே போயிட்டாளும்...' ஆமாம்டா, இப்ப, அம்மாவும் இல்லே. அவளும் செத்துப் போயிட்டாளாம். நான் அழைச்சிண்டு வந்து ட்டேன். உன்னேடே வளரட்டும்னு...' இப்போது தியாகு தயக்கத்துடன் அம்மாவைப் பார்த் தான். திரும்பி இரட்டைச்சாரியிலும் வீடு கள் நிறம்பிய அக்ர காரத்தையும் பார்த்தான். லாந்தர் கம்பத்தில் விளக்கு எரிந் தாலும் அது தன் அடியில் மட்டும் வெளிச்சத்தைப் பரவவிட்டுச் சுற்றுப் புறத்தை இருளிலே மூழ்கடித்துக் கொண்டிருந்தது. அந்த இருளில் ஒவ்வொரு திண்ணையிலும் யாரோ படுத்திருந்தார் கள். யாரோ என்ன? எதிர் வீட்டில் ஜகன்னதாச்சாரி பன்னிரண்டு திருமண் பளபளக்கச் சுவரில் சாய்ந்தபடி சிக்குப் பலகையில் இருந்த புத்தகத்திலிருந்து பாசுரம் படித்துக் கொண்டிருந்தார். அகல் விளக்கு குளுமையாக முத்துப் போல் எரிந்து கொண்டிருந்தது. அதற்கும் அடுத்தாற்போல் வைதீஸ்வரன் வீடு. ரொம் பவும் பழைமையில் ஊறியவர். அவர் மனைவி நெருப்பை அலம் வதாக எல்லோரும் பேசிக் கொள்வார்கள். அவ்வளவு ஆசாரம். இரண்டு பேரும் கோயிலுக்குப் போய்விட்டு வந்து பலகாரம் பண்ணிவிட்டு வாசல் திண்ணைக்கு வந்து விட்டார்கள். 'அடியே அம்மாளு வாசு ஊர்லேதானே இருக்கான் : என்று அவர் தம் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார்: