பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 ஒரு துளி ஆமாம்...ஊர்லே இருந்தாலும் ஒண்ணுதான். இல்லாட் டாலும் ஒண்ணுதான், ’’ ஏண்டி அப்படிச் சொல்றே? ' பின்னே என்னவாம்? கிழக்கு வெளுக்கறத்துக்கு முன்னுடி எழுந்திருந்து சேரிப் பக்கம் போன...எப்பத் திரும்பி வரானே அப்பத்தான் அவனைப் பாக்க முடியும். காந்தி சொல்ருராம் அவாதான் ஹரியோடே குழந்தைகள்னு, அந்தக் குழந்தைகளை இவன் புனருத்தாரணம் பண்ருளும்...' ' கறுப்பு நாயை வெள்ளை நாயாக்கப் பாக்கருன். இல்லையா ? இருவரும் சேர்ந்தே சத்தம் போட்டுச் சிரிக்கிருர் கள். வாசுவின் செவிகளில் இச்சொற்கள் விழுந்தாலும் அவர் அதற்கு ஒர் உருவம், மதிப்பு ஏதும் கொடுக்கவில்லை. செல்லம் அப்படியில்லை. அவள் அந்த ஊரோடு ஒட்டி வாழ்ந்தாக வேண்டும். அவள் பேச்சுப்படி இவர் ஜம்முனு வருஷத்திலே பத்துமாசம் ஜெயிலுக்குப் போயிடருர். இந்தப் பொல்லாப்பு புடிச்ச ஊர்லே நாளுக்கும் குப்பை கொட்டனும் ? வைதீஸ்வரன் தம்பதியின் பேச்சைக் கேட்டவள் திரும்பி வாசல் தூணைக் கட்டிக் கொண்டு நிற்கும் அமாசியின் பையனப் பார்த்துக் கொண்டே கல்லாக நின்ருள். 'உள்ளே அழைச்சிண்டு போடா தியாகு. இனிமே அவனுக்கு எழுதப் படிக்கச் சொல்லித்தர வேண்டியது உன் பொறுப்பு...' அது சரி அப்பா...உங்க கொள்கை எனக்குப் புரியறது. இவன் தினம் தினம் நைட் ஸ்கூலுக்கு வேளுவரட்டும். பாடம் சொல்லித் தருவோம்...இங்கே ஆத்துலே வச்சுண்டா ஊரிலே நாலு பேர்...' வாசு மகனையே உற்றுப் பார்த்தார். தன் கொள்கைகளை மனப்பூர்வமாக மனத்துக்குள் ஆதரிக்கும் மகனும், மனைவியும் இந்த நாலு பேருக்காகப் பயப்படுகிருர்கள். இங்கே வா செல்லம் : இப்ப நாலு பேரோடு சமாளிக்க முடியாத பிரச்னையை நாளைக்கு நாலாயிரம் பேரோடே சமாளிக்கணும். அப்புறமா நாலு லட்சம், நாலு கோடின்னு ஆகும். பிற்பாடு நாற்பது கோடியோடே சமாளிச்சே ஆகணும். ஒரு நல்லது நடக்கணும்ன பலரோடே மோதிண்டுதான் ஆகனும் செல்லம், மோதிண்டுதான் ஆகணும்...இதெல்லாம் உனக்குப் புரியறது. ஆன நாலு பேருக்காகப் பயப்படறே...' இவர்களுடைய தர்க்கமெல்ல்ாம் அமா சி யி ன் மகன் குமரனுக்குப் புரியவில்லை, நாம் எப்படியோ போருேம்...இந்த