பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி 27 i ஐயர் எதுக்கு நம்மை இவர் ஆட்டுக்கு இட்டாறனும்? என்று வியந்தபடி நின்றிருந்தான். உள்ளே வாடா...' என்று கர்ஜிப்பது போல் அழைத் தார் வாசு அவனே. குமரன் தயங்கியபடி உள்ளே வந்தான். இடைக்கழியில் மறுபடியும் சுவருடன் ஒட்டியவாறு நின்ருன். சுவரைக் கை களால் தடவித் தடவிப் பார்த்தான். கல்லும், முள்ளும், குண்டும், குழியும் சாக்கடை ஒரமுமாக அந்த ஹரிஜனச் சிறுவன் பிறந்தது முதல் இன்று வரை தன் நாட்களே ஒட்டியவன். ஓ ! இந்தச் செவரு எம்மாம் நைஸ்ாக்கீது...' என்று திரும்பத் திரும்ப வியந்தான் அவன். செல்லம் ஓர் ஈயப்பாத்திரம் நிறைய சாதம் பிசைந்து எடுத்து வந்தாள். தாமரை இலையைப் போட்டுத் தயிர் சாதத்தை எடுத்து அதில் வைத்துத் தொட்டுக் கொள்ள ஊறுகாயும் வைத்தாள். அவள் பார்வை தெருவை அளந்தது. ஜகன்ன தாச்சாரி பாசுரம் படித்து முடித்துச் சிக்குப் பலகையை மடக்கியபடி எழுந்தார். அட ராமா! அவர் பார்த்துத் தொலைக்கப் போருர் என்று முனு முணுத்தபடி செல்லம் கதவை ஒருக்க்ளித்தாள். வாசுவுக்குச் சிரிப்பு வந்தது. அடியே! இப்ப கதவைச் சாத்தறே, நாளைக்கும் சாத்து வியா? அப்புறமா மறுநாளைக்கும் சாத்துவியா? காலம் பூராக் கதவைச் சாத்திண்டு புழுங்க முடியுமா ? இந்தப் புழுக்கத்தைச் சமாளிச்சுடலாம்டி, ஆன...மனசிலே புழுக்கம் இருக்கப்படாது.” செல்லம் அவரைவிட ஒருபடி வேதாந்தம் அதிகமாகக் கற்றவள். சட்டென்று பட்டுக்கத்தரிப்பதுபோல் கதவை அகலத் திறந்து வைத்தாள். தெரு விளக்கின் வெளிச்சம் வாசல். குறட்டைத் தாண்டியபடி மிக லேசாகத்தான் ரேழிக்கு வந்தது. வாசுவைப் பற்றித்தான் ஊராருக்கு ஒரு மாதிரியான எண்ணம் ஆயிற்றே.ஜகன்னதாச்சாரி தம் பார்வையை இந்தப் பக்கம் ஒட்டினர். கறுப்பாக கன்னங்கறேலென்று ஓர் பையன் சம்பிரமமாகச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொள்ள நாலெட்டில் வைதீஸ்வரன் வீட்டுப்படியேறிச் சுருக்கமாக ஏதோ கூறி அவரை யும் தம் வீட்டுத் திண்ணைக்கு அழைத்து வந்து இக்காட்சியைச் சுட்டிக் காட்டினர். வைதீஸ்வரனின் மனைவி அம்மாளு ஒருபடி மேலாகவே நடந்து கொண்டாள்.