பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 ஒரு துளி ' அடியே செல்லம் என்று அவள் அழைத்த போது செல்லத்தின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. உடம்பு வியர்த்து விட்டது. இவள் இந்த வேளையில் எதுக்குக் கூப்படரு ? என்று நினைத்தபடி, ' வாங்கோ மாமி’ என்று பதில் குரல் கொடுத்தாள் செல்லம். உள்ளே வரதுக்கில்லே, ரெண்டு வெத்திலே இருந்தாக் கொடேன்- ' உள்ளே வாங்கோ...வெறும் வெத்திலையா தரப்படாது. சீவல், மஞ்சளோடே, குங்குமத்தோடே தரேன் வாங்கோ...' ஊஹீம்...இந்த அகாலத்துலே யார் தீட்டுப் பட்டுண்டு குளிக்கறது ?" செல்லம் வெளியே வெற்றிலைத் தட்டுடன் வந்தபோது அம்மாளு எதிர்வீட்டு வாசலில் நின்றிருந்தாள். வாசு மனைவி யின் பின்னல் வந்து நின்று, ஏய் பைத்தியம் : இங்கே நீ யாருக்குச் சாதம் போடறேன்னு பாக்க வந்திருக்கா. அவ வெத் திலை கேட்டது. நெசம்னு நினைச்சுண்டு நீ தட்டைத் துரக்கிண்டு ஒடறே ' என்று கடிந்து கொண்டார். செல்லம் தன் நெஞ்சில் யாரோ பளுவான கல் ஒன்றை ஏற்றி வைப்பது போன்ற சுமையுடன் பாதி தெளிவுடனும், பாதி கலக்கத்துடனும் குமரன் என்கிற பாரத்தைக் கணவனுக் காகச் சுமக்க இசைந்தாள். - அடுத்த நாளே சேரிப்பையன் ஒருவன் வாசுவின் வீட்டில் வளர்வது குறித்து அந்த ஊரே அமளிப்பட்டது. அசுத்தத் தைப் பார்ப்பவர் போல் செல்லத்தை அவ்வூர்ப் பெண்கள் முகம் சுளித்தே பார்த்தார்கள். படித்துறையில் அவள் குளித்துவிட்டுக் கரையேறும்வரை பொறுத்திருந்துவிட்டு மற்றப் பெண்கள் அந்தப் படித்துறையையே மறுபடியும் கழுவி விட்டுத் தண்ணீரில் இறங்கிக் குளிப்பார்கள். இதை ஒருதரம் அவள் தன் கணவ ரிடம் கண்ணிர் பெருக வர்ணித்தபோது அவர் மறுபடியும் முதலில் அவளுக்குச் செய்த உபதேசத்தையே மீண்டும் கூறினர். ஒரு கொள்கை நனவாக வேண்டுமானல் பலருடன் மோதிக் கொண்டுதான் ஆகவேண்டும். ' - தியாகு அவ்வூரில் படிப்பை முடித்துவிட்டுச் சென்னைக்கு மேல்ப்படிப்புக்காகச் சென்றுவிட்டான். குமரனும் வளர்ந்து விட்டான். ஐயாவுக்கும், அம்மாவுக்கும் தன்னுல் பெரிய சங்க டம் என்று நினைத்து அவன் வாசுவிடம் தன் கருத்தை ஒரு தினம் பணிவுடன் தெரிவித்த போது அவர் கூறிய செய்தி அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது. நீ ஊருக்கு வெளியே நைட்