பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி 373 ஸ்கூல்’லேயே தங்கிடறேன்னு சொல்றேப்பா... நானே அங்கே வந்துவிடலாம்னு பார்க்கிறேன். இந்த வீட்டைக் காலி பண் னிட்டு அம்மாவைத் தியாகுகிட்டே அனுப்பிடறேன். அங்கே போய் அவனுக்கு வீட்டுச் சமையலா அவளும் சமைச்சுப் போடட்டும். அவளும் இந்த ஊரிலே தாங்கமுடியாத கஷ்டத் தைச் சுமந்து சுமந்து உருமாறிப் போயிருக்கா ஒரளவுக்கு உன்னையும், எங்களையும் ஒண்ணுவே இந்த ஊர்க்காரா நடத்த ஆரம்பிச்சுட்டா, பட்டணத்திலே இவ்வளவு மோசமில்லே. மன சுக்குள்ளே குமைஞ்சுண்டாவது வெளியிலே வேஷம் போடுவா. தாங்க ரொம்ப முன்னேறிட்டதாக அவாளுக்கு ஒரு பிரமை. உண்மை நிலையை ஜீரணிக்கிறது ரொம்பக் கஷ்டம். பிரமை நிலையை எப்படியாவது சமாளிச்சுடலாம், ! செல்லத்துக்கு ரயில் புறப்படுகிறவரைக்கும் என்னவோ போல் இருந்தது. வயல்காடு, தோப்பு, ஆற்றங்கரை, கோயில் எல்லாம் அவளுடைய அங்கங்களைப்போல அவளிடமிருந்து பிரிக்க முடியாதவை. ரயில் மெதுவாக நகரும்போது முதலில் தென்னந்தோப்பும், வயல்வெளிகளும் பின்தங்கின. அப்புறம் ஆறு. அவள் இறங்கிக் குளித்த-ஊராரால் அசுத்தம் என்று மதிக்கப்பட்ட-படித்துறை மெல்லப் பின் தங்கியது. கோயில் கோபுரம் மட்டும் அவளுடன் ஒடி வருவது போல் இருந்தது. ஸ்டேஷனுக்கு வந்திருந்த குமரன் கூடை நிறைய வெள்ளரிப் பிஞ்சுகளைக் கொடுத்து, ' அம்மா தியாகுதான் என்னை மறந் திடிச்சி. நான் அதை மறக்கலைன்னு சொல்லுங்க, கிராமத் துக்கு வரச்சொல்லுங்க ' என்ருன். ஊருக்குப் போயிட்டு வா, செல்லம். நீ என்னுடைய கொள்கைளுக்குப் பணிஞ்சு, உனக்கென்று ஒர் எண்ணமும் இல்லாம ரொம்பத் தியாகம் பண்ணிட்டே, உன் பிள்ளை முன்னைப் போல இல்லே, மாறிண்டு வரான்னு தெரியறது. அந்த மாறு தல் உனக்கும் அவசியம்னு எனக்குத் தோண்றது...' அப்படியெல்லாம் நான் நெனச்சதேயில்லை- என்று கரகரத்த குரலில் பதில் சொன்னுள் செல்லம். அவரை விட்டுப் பிரிவது அவளுக்கும் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும், அந்த ஊர்க்காரர்களிடமிருந்து கொஞ்ச நாளேக்காவது பிரிஞ்சு வெளியே போகனும் என்று மனப்பூர்வமாக ஆசைப்பட்டாள் அவள். - - அவளுடன் ஓடி வந்த கோபுரமும் பின்தங்கி விட்டது. ஒரு கரும் புள்ளியாய் மறைந்தும் போயிற்று. செல்லம் சென்னையை வந்தடைந்தாள். - сът - 18