பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 ஒரு துளி 2 எழும்பூர் ரயில் நிலையத்தில் தியாகுவைப் பார்த்தவுடன் திகைத்துப் போனுள் செல்லம். முரட்டுக் கதர் ஆடையைக் காளுேம். கள்ளமற்ற முகத்தில் ஓர் இறுக்கமும், ஆணவமும் சேர்ந்து காணப்பட்டது.

  • வா அம்மா...அப்பாவையும் அழைச்சிண்டு வந்துடறது தானே ? அவர் மட்டும் கிராமத்துலே என்ன பண்ணப் போருர்?' என்றபடி வரவேற்ருன் தியாகு:

அவரா வரப்பட்ட ஆசாமி அவர் நைட் ஸ்கூலை : விட்டுட்டு வருவாரா என்ன? தியாகு, நீ மாறிப் போயிட் டேடா, அப்பா கூட சொல்ருர் : உன் பிள்ளை மாறிண்டு வராளும்; உனக்கும் அந்த மாறுதல் தேவை. போய் அவன் கிட்டே இருன்னு ... நெசம்மா நீ மாறித்தான் போயிருக்கே.' தியாகு அமுத்தலாகச் சிரித்தான். டாக்ஸியில் பெட்டி, படுக்கையை எடுத்து வைத்தபோது வெள்ளரிப் பிஞ்சுகள் நிறைந்த கூடையைப் பார்த்தான் தியாகு. ஐந்தாறு வருஷங் களுக்கு முன்பாக இருந்தால் வெள்ளரிப் பிஞ்சுகளைக் கூடையி விருந்து அள்ளிக்கொண்டு உப்பைப் பொடி செய்து தோய்த்துத் தின்று கொண்டேயிருப்பான். இப்போது அவனுக்கு இந்த வெள்ளரிப் பிஞ்சுகள் லட்சியமில்லை. 'உனக்குப் பிடிக்குமேன்னு குமரன் கொடுத்தான் ’’ என்று செல்லம் அவனுக்கு லேசாக அவனைப் பற்றி நினைவூட்டினள்.

  • குமரன? ஓ ! அவன் எப்படியிருக்கான்? படிப்பெல்லாம் முடிஞ்சு போச்சா?'

மேலே இங்கே வந்து படிக்கச் சொல்லி உன் அப்பா சொன்ஞர். அவன்தான் கேக்கலை. இவ்வளவு படிச்சதே பெரிசய்யா...' என்று சொல்லிவிட்டான், அதுலே உன் அப்பா வுக்கு ரொம்ப வருத்தம்-’’ தியாகு எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை: அவன் சிந்தனை பூராவும் எதிலோ லயித்திருந்தது. செல்லம் இளைத்துப் போயிருப்பதை அவன் கவனிக்கவில்லை. அதைப்பற்றி ஒரு வார்த்தையாவது விசாரிப்பான் என்று அவள் எதிர்பார்த் தாள். - டாக்ளி மயிலாப்பூரை அடைந்து பெரிய பங்களாவுக்குள் நுழைந்து ஒரு சுற்றுச் சுற்றி அவுட்ஹவுஸ் பக்கம் போய் நின்றது: -