பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் II ஞானப் பிரகாசம் மேற் பார்த்த மடத்தில் இரண்டு வருஷங்கள் கழித்தான். சுற்றி நடக்கும் அபத்தங்களும், சில சுவாமியார் களின் இயற்கைக்கு விரோதமான இச்சைகளும், மனத்திற்குச் சற்றும் சாந்தி தராத இருப்புச் சட்டம் போன்ற கொள்கைகளும் அவன் மனத்தில் உலகக் கட்டுப் பாடே ஒரு பெரிய புரட்டு, என்ற நம்பிக்கைகளைக் கிளப்பி விட்டன. - அதனிடமும் விடைபெற்றுக் கொண்டு, திரு. ராமசாமிப் பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தில் ஈடு பட்டு விட்டான். அதிலே அவன் ஒரு பெரும் தீவிரவாதி. இப்பொழுது தோழர் நரசிங்கம் என்ற பெயருடன், தனக்குத் தோன்றிய உண்மைகளை அதில் ஒரு பைத்தியம் பிடித்ததுபோல், பிரசாரம் செய்து கொண்டு வந்தான். - ஒரு தடவை தகப்பனுரைக் காண ஆதனுரருக்கு வந்தான். பழைய எண்ணங்கள் குவிந்திருக்கலாம். அதைப் பற்றி எனக்குத் தெரியாது. அவனுக்கு இரண்டு உண்மைகள் தெரிந்தன. தனக் கும் தனது குடும்பத்தினருக்கும் இடையே எண்ணங்களில், செய்கைகளில், ஏன் எல்லாவற்றிலுமே ஒரு பெரிய பிளவு இருக் கிறது என்பது ஒன்று இன்னும் ஒன்று, தான் சென்ற பிறகு, தனக்கு ஒரு அழகான-பறைச்சிகளுக்கும் அழகாயிருக்க உரிமை யுண்டு-தங்கை, பதினறு பிராயத்தாள் இருப்பதை யறிந்தது தான. ஆல்ை, இவர்களை மனிதரின் நிலைமைக்குக் கொண்டுவர, எந்தப் பகீரதன் உண்டாகப் போகிருனே என்ற மலைப்பு ஏற்பட்டு விட்டது. தனது பிரசங்கங்கள் படித்தவர்களிடத்தில் செல்லும்; இந்த வாயில்லாப் பூச்சிகளிடத்தில் ? 4 ராமநாதன், வீட்டில் செல்லப் பிள்ளை. இட்டது சட்டம்: பக்கத்து ஜில்லாத் தலை நகரில் மெட்ரிக்குலேஷன் வரை படித் தான். அவனுடைய படிப்பு வேறு ஒரு தினுஸ் கெட்டிக்காரன்; பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல. சிலரைப் போல் பள்ளிக் கூடத்தில் மூழ்கி விடவில்லை. காலத்தின் சக்தி வசப்பட்டு அதன் நூதன உணர்ச்சிகளில் ஈடுபட்டு இன்பப் பட்டவன். சென்னைக்குச் சென்று மேல்ப் படிப்புப் படித்தான் ; எம். ஏ. வரையில்: அதற்குள் 1930 இயக்கம் வந்தது. தந்தை நினைத்த கலைக்டர் பதவியை விட்டு, தடியடிபட்டு ஜெயிலுக்குச் சென்ருன். ஜெயிலில் இருந்து வந்ததும் ஹரிஜன இயக்கத்தில் ஈடு பட் டான். தகப்பருைக்கு வருத்தம் தான். ராமநாதனின் அசையாத