பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி 275 வாசலில் அழகும், களையும் நிறம்பிய பெண் ஒருத்தி தன் நாய்க்குட்டியைக் கையில் பிடித்தபடி புன்முறுவலுடன் நின்றி ருந்தாள். ஹலோ! வஸந்தி ! இதுதான் என் அம்மா...' அவள் மணியோசை போல நகைத்தாள். செல்லத்தைத் தலையிலிருந்து கால் வரை அவள் பார்த்த பார்வை வேறு விளக்கம் கொடுப்பது போல் இருந்தது. இடையில் கட்டியிருந்த முரட்டுக் கதர் புடவை, ஆடம்பர மற்ற நகைகள், ஒரு லட்சிய வாதியைக் கணவகைக் கொண்டு அவனுடன் வாழ்க்கை பூராவும் நிறை வுடன் வாழ்ந்துவரும் கம்பீரமும், புறத்தோற்றத்தில் மனத் தைப் பறிகொடுத்து அதில் லயித்துவிடாமல் ஒதுங்கி நின்றே கவனிக்கும் ஆற்றலையும் படைத்தவள் அவள் என்று வஸந்தி புரிந்து கொள்ளவில்லை. சுருக்கமாகச் செல்லம் ஓர் ஏழை என்று நினைத்துக் கொண்டாள். செல்லத்துக்குத் தன் மகனைப் பற்றி உடனே புரிந்து விட்டது. தியாகுவின் கவனம் வேறு திசையில் சென்று விட்டது. அவன் இனி வாழப்போகும் உலகமும், அதற்கான பாதையும் வேறு என்பதை அவள் தெரிந்துகொண்டாள். தேச மக்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதோ, அதற்காக ஆயிர மாயிரமாக மக்கள் தியாகம் புரிவதோ அவன் கவனத்திலிருந்து மறைந்துவிட்டது. அவன் பகட்டும், படாடோபமும் நிறைந்த உலகத்துக்குள் நுழைய விரும்புகிருன். அன்றிரவு சாப்பிடும்போது வெகு நேரம் மெளனமாகவே இருந்தாள். அம்மாவே ஏதாவது வளந்தியைப் பற்றிக் கேட் பாள் ' என்று நினைத்தான். செல்லத்தின் கவனமெல்லாம் வாசுவின் பேரில் இருந்தது. வாழ்க்கை பூராவும் சுகத்தைக் காணுமல் சுதந்திரப் போர் ஒன்றையே லட்சியமாகக் கொண்டு, காந்தியடிகளின் வேண்டுகோளின்படி ஹரிஜனச் சிறுவன எடுத்து வளர்த்துத் தன் மகனைப் போல ஆளாக்கி, அதனல் ஊராரால் ஒதுக்கப்பட்டு ஊரின் புறத்தே வாழ்ந்து கொண் டிருக்கும் அவரை நினைத்ததும் அவள் கண்கள் பனித்தன. தியாகு அவரைப்போல் லட்சியங்களையும், கொள்கைகளையும் கடைப்பிடிக்காவிடினும் தகப்பனின் மனம் குளிர அதைப் பற்றிப் பேசுவதையும் விட்டுவிட்டான் போல் இருந்தது. மகனின் நீண்ட மெளனம் அவளைப் பொறுமை இழக்கச் செய்தது. இலையில் பரிமாறிவிட்டு அவள் எதிரில் உட்கார்ந்து, அப்பா ரொம்ப இளைச்சுப் போயிட்டாரடா, நீ சீக்கிரம் படிப்பை முடிச்சுண்டு ஒரு உத்தியோகம் தேடிண்டா கொஞ்ச காலமாவது அவர் நிம்மதியா இருக்கமுடியும் ' என்று பேச்சை ஆரம்பித்தாள், தியாகு அம்மாவை நிமிர்ந்து பார்த்தான்,