பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 ஒரு துளி ‘' அவரை யார் நல்ல நிலைமைக்குப் போகவிடாமல் தடுத்தது? எம். ஏ. பி. எல். பாஸ் பண்ணிட்டுச் சத்தியாக்ரகமும், ஹரிஜன சேவையும் பண்ணிண்டிருந்தா வாழ்க்கையிலே சுகத்தை எப்படியம்மா காணமுடியும்? இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் இங்கே பெரிய அட்வகேட். அவர் பொண்தான் நீ பார்த்தியே, வஸந்தி. இவர்களுக்கு மட்டும் தேசபக்தியில்லையாம்மா? மனசுக் குள்ளே இவர்களும் காந்தியடிகளின் கொள்கைகளை ஆதரிக்கிற வாதான். அப்பா மாதிரி பைத்தியமாயிடலே, பிழைக்கத் தெரிஞ்சவா...அந்தக் குமரனை வளத்தாச்சு. அவனை விட்டு தொலைச்சிட்டு இங்கே வந்துடறதுதானே ?’ என்று படபடத் தான் தியாகு.

  • அவர் வரமாட்டார். அவர் நடத்தற நைட் ஸ்கூல் 'லே இப்ப எத்தனை பேர் படிக்கிரு தெரியுமா ? கிட்டதட்ட நூறு பேருக்கு மேலே இருக்கும்... நம்ப ஊர்ச் சேரிப் பக்கம் நீ வந்து பார்க்கலே, கிளி கொஞ்சறது. குமரனும், அவருமாச் சேர்ந்து எவ்வளவு பண்ணியிருக்கா. அந்த ஏழைகள் எப்படி மனசு குளிரக் குளிர அவரை வாழ்த்தரு தெரியுமா ? ' >
  • வாழ்த்திண்டே இருக்கட்டும். நீ இனிமே இந்தக் கதர்ப் புடவையைக் கட்டறதை விட்டுடு..."
  • ஏண்டா? '

இங்கே அட்வகேட் வீட்டிலே உன்னை மதிக்கமாட்டா...' இவா மதிப்பு யாருக்கு வேணும் இங்கே? ’’ 'நான் வஸந்தியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் ...' பேஷாப் பண்ணிக்கோ, செளக்கியமா இரு...அதுக்காக என்னுடைய லட்சியத்தை நான் விடமுடியுமா என்ன? ' வஸந்தியோட அப்பா அவர் பெண்ணையும் கொடுத்து அவர் கிட்டே என்னே ஜூனியராவும் வச்சுக்கருராம். ' செல்லம் மேலும் பேசவில்லை. தியாகு வெளியே சென்ற பிறகு அவள் சுருக்கமாக அவனைப்பற்றி வாசுவுக்குக் கடிதம் எழுதினுள் அவரும் சுருக்கமாகவே பதில் எழுதினர்: ஒடு முற்றினல் உறவு விட்டுப் போகும். நம் கடமையை நாம் செய்து முடித்துவிட்டோம். அவன் எங்காவது நன்ருக இருக்கட்டும். இங்கே குமரன் தியாகுவைவிடப் பன் மடங்கு என்னைக் கவனித்துக் கொள்கிருன். ' தியாகுவின் படிப்பு முடிந்தது. உடனே திருமணத்துக்கு நாளும் குறித்தார்கள் எதற்கும் பிள்ளையைப் பெற்றவர் ஒரு