பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி 277 தரமாவது நேரில் வரவேண்டும். இல்லை, நாமாவது அங்கு போகலாம் என்று தியாகுவிடம் கேட்டார் அட்வகேட்: எல்லோருமாகக் கிராமத்துக்குச் சென்ருர்கள். எளிமையே உரு வான அந்தக் குடிலின் முன்பு இறங்கியவுடன் தியாகு கூனிக் குறுகிப்போனன். உள்ளே நார்க்கட்டிலில் படுத்திருந்தார் வாசு: சுவர் ஒரத்தில் கைராட்டையும், சுவரில் காந்தியடிகளின் படமும் இருந்தன. மண் கூஜாவில் நீர், கொடியில் மறுநாள் உடுத்த நாலுமுழம் கதர் வேட்டி, துண்டு. ஓர் ஒரத்தில் கள்ளிப் பெட்டியை "ஷெல்ப்"பாக மாற்றி புத்தகங்களை அடுக்கி வைத் திருந்தார். கார்ல் மார்க்ஸ், டால்ஸ்டாயிலிருந்து அரவிந்தர், காந்திஜி வரை புத்தக உருவில் அங்கு கொலுவிருந்தார்கள்: ஒரு மனிதனின் முக்கியமான தேவைகள் எதுவோ அவை மட்டும் அங்கிருந்தன. 'வா அப்பா, தியாகு...!’ என்றபடி அவர் எழுந்து உட்கார்ந் ததும் மகனே அவர் தோற்றத்தைக் கண்டு திடுக்கிட்டான்) "அப்பா ஏனிப்படிக் கறுத்துவிட்டார் ? ஏன் அவர் உதடுகள் தடித்துவிட்டன ? - - செல்லத்தின் நெஞ்சு உலர்ந்துவிட்டது. 'நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லையே. உடம்பு, சரியில்லைன்னு எழுதப்படாதோ? ’’ அவர் சிரித்தபடி அவள் பேச்சை ஒதுக்கிவிட்டார். 'வாசலில் யாரோ காரில் வந்திருக்கிரு.ர்கள் போல இருக்கே...' என்று மகனைப் பார்த்துக் கேட்டார். செலலம் எல்லாவற்றையும் கூறியதும், அவர், அப்படியா ? என்னைகுஷ்டம் பிடித்தவனை-அவர்கள் பார்த்தால் உனக்குப் பெண் தரமாட்டார்கள் தியாகு. நான் போர்த்திக்கொண்டு படுத்திருக் கிறேன். எனக்கு ஜுரமென்றே இருக்கட்டும்; அவர்களை உள்ளே அழைத்துவா...' என்றதும், அட்வகேட்ட்ை உள்ளே அழைத்து வந்தான் அவன். ஒன்றிரண்டு நிமிடங்கள் பேச்சு நடந்தது. அவருக்குத் தியாகுதான் முக்கியமே தவிர தியாகுவின் தந்தை யல்ல. - - 'முடிந்தால் வருகிறேன். எப்படியும் அடுத்த மாசத்தி லாவது, ஆகஸ்டிலாவது மறுபடியும் சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பமாகும். இச்சமயத்தில் காந்தியடிகள் மிகத் தீவிரமாக வெள்ளையர்களை எதிர்க்கப் போகிருர், அதுலே நான் எப்படியும் கலந்துப்பேன். தியாகுவின் கல்யாணத்துக்கு என் மனப்பூர்வ மான ஆசிகள்.’’ என்று உறுதியுடன் பதில் அளித்தார் வாசு: செல்லம் மீண்டும் சென்னைக்கு மகனின் திருமணத்துக்குப் போய் வந்தாள். அதன் பிறகு அவள் எந்த ஊரைத் தன் மனத்