பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 ஒரு துளி துக்கு இனியதாக நினைத்தாளோ அவ்வூரின் மண்ணுடன் கலந்து விட்டாள். தியாகு வந்தான். போனன். வாசு விரும்பியது போல் அவரால் சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. செல்லத்தின் மறைவு அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. வாழ்க்கை பூராவும் அவள் விரும் பியோ விரும்பாமலோ அவருடைய எண்ணங்களை, நினைவுகளை அவள் செயல் படுத்தியவள். அக்ரகாரத்தில் ஹரிஜனச் சிறுவன வீட்டுக்குள் ஏற்றுக்கொண்டு அன்னம் படைத்து வளர்த்தவள். அதனால், ஊராரால் அவளே தீண்டப்படாதவள் போல் ஒதுக்கி வைக்கப்பட்டவள். அவள் வயிற்றில் பிறந்தவனல் இந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் தனக் கென்று ஒரு பாதையை வகுத்துகொண்டு போய்விட்டான். 3 அன்று அடை மழை. கார்த்திகை மாதம். தேசம் எங்கும் ஆகஸ்ட் புரட்சிக்குப் பிறகு அமைதிகுலைந்து மக்கள் அடிமைத் தளையிலிருந்து விடுதலைபெறத் துடித்துக்கொண்டிருந்த காலம். காந்தியடிகள், மற்ற தலைவர்கள் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டுத் தியாக வேள்வியில் தத்தம் ஆத்மாக்களை நெய் யாகச் சொரிந்து பாரதமாதாவின் விலங்கை அறுத்தெறியும் தபசில் ஈடுபட்டிருந்தார்கள். கிராமத்தில் ஜகன்னதாச்சாரி இல்லை. அவரும் பட்டணம் போய் விட்டார். தியாகு அதிர்ஷ்டத்தில் கொழிப்பதைக் கண்டார். அப்சரஸ் போன்ற மனைவி, அந்தஸ்து, செல்வம் அவனிடம் இருப்பதைக் கண்டார். சட்ட மறுப்பு செய்து சிறை செல்லும் சத்தியாக்கிரகிகளுக்கு எதிராக அவன் சர்க்கார் தரப் பில் தன் கடமையைச் செய்துக் கொண்டிருந்தான். வைதீஸ்வரன் பெரிதும் மாறிவிட்டிருந்தார். அவருடைய வரட்டு ஆசாரங்கள் திடீரென்று மாறின. அம்மாளு மறைந்த பிறகு அவளுடன் அவருடைய வரட்டு வாதங்களும் மறைந்தன. தாமாகவே அவர் ஒரு நாள் வாசுவைத் தேடி வந்தார். 'ஏம்ப்பா! உன் பிள்ளை நல்ல நிலைமையிலே இருக்கானே. நீ அங்கேயே போயிடப் படாதோ ? ' இங்கே இருக்கிறதிலே இருக்கிற சுகம் அங்கே வராது, வைத்தி!' , - இந்த நைட் ஸ்கூலுக்குப் பக்கத்துலே நான் ஒரு மருத் துவ விடுதி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்-’’ " யேஷாச் செய்யேன்..."