பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி 379 இதுவரை குமரன் மெளனமாக வாசுவின் புண்களை மருந்தி ஞல் கழுவி ஒற்றித் துடைத்துக் கட்டுப் போட்டுக் கொண்டிருந் தான். " உன் பிள்ளை பண்ணுகிறது அநியாயம், வாசு !’ இல்லை, வைத்தி அவன் பண்றதுதான்- பண்ணியிருக்கி றது-நியாயமானது. அவனும் என்னேப் போல ஒரு தொண்டன இருந்துட்டா எனக்கு என் வாழ்க்கையிலே பிடிப்போ ருசியோ ஏற்பட்டிருக்காது. எதிலுமே எதிர் மறையாக ஒன்று இருந்தால் தான் உண்மைக்குப் பலம் ஏற்படும்...' வைத்தீஸ்வரனுக்கு அதிகமாக ஒன்றும் புரிந்து விடவில் ல்ை 'குமரா ! ஐயா கிட்டே இத்தனை வருஷமா இருக்கே: தேசம் பூராக் கொந்தளிச்சுண்டு இருக்கு. நீயும் சட்ட மறுப்பு செஞ்சுட்டு ஜெயிலுக்குப் போன உனக்கு இன்னும் கெளரவம் ஜாஸ்தியாகும்...' குமரன் முறுவலுடன் தலையாட்டினன். அவன் அவர் கூறி யதை மறுத்தான, ஏற்றுக் கொண்டான என்பதும் அவருக்குப் புரியவில்லை, கார்த்திகை மாதமாதலால் பகல் பொழுது மிகவும் சுருக்க மாக இருந்தது. எத்தனையோ ஆண்டுகளாக வாசு தனிமையில் தான் இருந்து வருகிருர் என்றுமே அவர் தம் மகனைப் பார்க்க ஆசைப் பட்டதில்லை. பகல் உணவுக்காக வீடு செல்லும் குமரனை நோக்கி, "ஒண்ணு பண்ணேன். வழியிலே தபாலாபீசுக்குப் போய் தியாகுவை வரச் சொல்லி ஒரு தந்தி கொடு எனக்கு அவனைப் பார்க்க ஆசையா இருக்குனு கொடு. தெரிஞ்சுதா?’ என்ருர், குமரன் அவ்விதமே செய்தான். அன்று மாலைப் பொழுதுக்குள் வானமெங்கும் கரிய மேகங் கள் திரண்டு கர்ஜனை புரிந்த வண்ணம் மழை தாரை தாரையா கப் பொழிய ஆரம்பித்தது. தொலைவில் நெடுஞ்சாலையில் அவ் வப்போது தெரியும் கார் விளக்குகளின் ஒளியைப் பார்த்தபடி வாசு படுத்திருந்தார். ' தியாகு வருகிருன். வராம இருப்பான ? என்ன இருந்தாலும் பெற்ற பிள்ளையாச்சே. ரத்த பாச மாச்சே!” என்று எண்ணினர். கொட்டும் மழையில் சொட்ட நனைந்தவாறு குமரன் குடிலுக் குள் நுழைந்து விளக்கை ஏற்றி விட்டுக் கட்டிலின் அருகில் சென்று, ஐயா ! காப்பி வாங்கி வந்திருக்கேன். சாப்பிடlங்