பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 ஒரு துளி களா? என்று அழைத்தான். வாசு பதிலேதும் கூறவில்லை. அயர்ந்து தூங்குகிருர் என்று நினைத்து வாயிலில் சென்று திண்ணை யில் உட்கார்ந்து நெடுஞ்சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். எங்கோ செல்லும் கார் ஒளியைப் பார்த்து, தியாகுவாத் தான் இருக்கும் ' என்று முணுமுணுப்பான். வரவரக் குறைந்து அந்தக் கார் தொலைவில் சென்றுமறையும். ஆழ்ந்த பெருமூச்சு அவன் இதயத்திலிருந்து கிளம்பும், மறுபடியும் மேக முழக்கம், மின்வெட்டு, மழைத்தாரைகள், கிராமமே இருளில் அமிழ்ந்து விட்ட தோற்றம். அடுத்தநாள் பொழுது விடிந்தது. கதிரவனைக் காணவில்லை" பகல் என்கிற பெயரில் இரவின் சாயவே உலகைப் போர்த்திக் கொண்டிருந்தது. அதிகாலையிலே குமரனுக்குத் தெரிந்துவிட்டது ஐயா வாசு போய் விட்டாரென்று. உலகத்தில் அவனுக்கு உற்ற வராய், தந்தை போன்றவராய், நல் ஆசானக இருந்தவர் போய்விட்டார். அவர் உண்மையில் எங்கும் போய்விடவில்லை. இவனுக்குத் தேசப்பணியில் ஆர்வம் அதிகரிக்கப் புதுப்பலம் ஊட்டும் வகையில் அவனுள் உறைந்து விட்டார். தியாகு வந்தான். முன்பு தாயைக் கரையேற்ற வந்தவன் மீண்டும் தந்தையைக் கரையேற்ற வந்தான். வானத்திலிருந்து அமுதம் போல் மழைத்தாரைகள் பொழிந்த வண்ணம் இருந்தன: சட்டுபுட்டென்று அவர் உடலை மயானத்தில் வைத்துத் தீ மூட்டிவிட்டு எல்லோரும் வந்து விட்டார்கள். அப்படி ஒரு பேய் மழை. நள்ளிரவில் குமரன் நெஞ்சில் ஏதோ ஒன்று பாரமாக அமுத்திக் கொண்டிருந்தது. குடிலில் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. தியாகு தன் வீட்டுத் திண்ணையில் படுக்கப் போய்விட்டான். வாசலில் நனைந்தபடி வெட்டியான் வந்து நின்று, ' குமரா ! ஐயா உடம்பு வேகவே இல்லையப்பா...' என்று அழைத்தான். " அதற்கு இவன் என்ன செய்யமுடியும் 2 நீர்ப்பிரவாகம் மயானத்தை முற்றுகையிட்டுக் கொண்டிருந் தது. குமரன் நெஞ்சில் உறுதியை வரவழைத்தவாறு வெட்டி யானுடன் மயானுத்துக்குச் சென்று தன்னை எவ்வகையிலும் மகனைப் போல் வளர்த்தவருக்கு மறுபடியும் தீ மூட்டினன். இறிது மழை நின்றது. அவரின் உடலைத் தி நாக்குகள் சுற்றிச் சூழ்வதை அமைதியுடன் பார்த்தான் குமரன். இன்னும் அரை மணிக்குள் அவர் பஞ்சபூதங்களுடன் கலந்து விடுவார்.