பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவி, மணிசேகரன் 盛岛、 பிட்டான். ஆங்...அவன் விட்டுப்பிட்டான? ஆண்டவன் நம்ம கஷ்டத்தைப் பாத்து அவன் மனசுலே அப்படி ஞாபகமறதியைக் கொடுத்திருக்கணும் ! " - ராசாகண்ணு தெம்மாங்குத் தெம்பில் தொடை தட்டிப் பேசிஞன். பொக்கிலைக்குக் கோபம் மனத்துள் கனன்றது. ரொம்ப பவுசாத்தான் இருக்கு, உங்கப் பேச்சு. அடுத்த வன் சொத்துக்கு ஆசைப்படறதுதான் ஆண்டவன் இஷ்டமா? இந்தப் பாரு மச்சான். மின்னே இந்த ரூபாயை உடைவங்க கிட்டே ஒப்படைக்கிறதுதான் உத்தமம்; இன்னிக்கு நம்ம பத்து ரூபாய்க்கு ஆசை வச்சிப்பிடலாம். நாளைக்கு இருபது ருவா செலவு தன்னலெ வந்து தொலையும். நமக்கு மென்னியைப் பிடிச்சா ஜீவன் போவுது. நெலமை அப்படி, நம்ம புள்ளைக் குட்டிகளுக்கு, சட்டையைப் போட்ட மவராஜன் சாபம் வேண்டா மச்சான் 1’’ ராசாகண்ணு, பொக்கிலையைக் கடுரமாகக் கவனித்தான். அவனுடைய கண்கள் வலிய வந்த சீதேவியை உதைத்துத் தள்ளும் மூதேவியும் இருப்பாளா என்று கேட்பனபோல் கவனித்தன. பொக்கிலை 1 யோசனை பண்ணிச் சொல்லு. அடுத்தவாரம் கார்த்திகை தீபம். கையிலே காலணு இல்லே. நீயோ ஒரே பழம் பொடவையே நம்ம தொழில்லே பழக்கிக் கட்டிக்கிட்டு வாரே ! இந்தக் காலத்திலே பச்சாத்தாபம், பாவம் இதுகளை யெல்லாம் மூட்டைகட்டி வச்சிப்பிட்டாத்தான் பொழைக்க முடியும், என்ன சொல்றே : ' -

  • சொல்றத்துக்கு என்ன இருக்கு சொரைக்குடுக்கைலே ? ஒரு பழம் புடவை கொடுத்த மகராசிபோல இன்னெரு பழம் புடவை கொடுக்கற மகராசி இருப்பாங்க. மொதல்லே இதை லாண்டிரிகார ஐயாகிட்டேக் கொடுத்து உடையவர் கிட்டே சேர்க்கச் சொல்லுங்க. உங்கமேலே சத்தியமா இந்தப் பணத்தை நான் தொடமாட்டேன். ஆமாம், சொல்லிப்புட்டேன். '

பொக்கிலை அதற்குமேல் அங்கு ஒரு விநாடியும் நிற்கவில்லை நேரே அடுக்களைக்கு விரைந்து கேப்பைக் கூழைத்துழாவி விட் டாள். ரசாகண்ணு என்ன செய்வதென்று தோன்ருமல் திரு திருவென்று விழித்தான். அப்படி விழித்தாலும், வறுமை நிலைமை யிலும் தன்னுடைய மனைவியின் நேர்மை சுபாவத்தை நினைந்து நெக்குருகிப் போனன். ... . . - - - . 황 姜 홍 முருகன் லாண்டிரியின் சொந்தக்காரன் ஏகாலி ராசா கண்ணுவின் செயலைக் கண்டு ஆச்சரியக் கண்களை அகல விரித் துக்