பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 துணி வெளுக்க மண்ணுண்டு கொண்டிருந்தான். அவனுக்கும் என்ன சொல்வதென்று புரியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. இந்தக் காலத்தில் இத்தனே நேர்மை சுபாவமுடைய மனிதன் வாழ்கிருன, என்று அவனுடைய நெஞ்சம் அவனையே கேட்டுக்கொண்டது. அதுவும் அந்த நேர்மை எங்கே வாழ்கிறது? ஒரு சாதாரண ஏகாலியிடம்: வறுமையின் சொந்தக்காரனிடம், வாழ்வைக் குடிசைக்குள் காணும் வற்றிய மனிதனிடம்! என்னங்க சாமி, இம்முட்டு யோசனை பண்ணுறிங்கோ ? ' ஏகாலியின் குரல் லாண்டிரியின் சொந்தக்காரன் சிந்தனையைக் கலைத்தது. ஒன்றுமில்லே, ராசாகண்ணு. உன்னுடைய உலகம் தெரியாத சுபாவத்தை நினைத்து யோசனை செய்தேன். ' 'நீங்க ஒண்ணு சாமி சம்பாதிக்கிற பணமே மனுஷன் கிட்டேருக்கிறதில்லேன்ன, இதெல்லாமா தாங்கிடப் போவுது? பாவம் பணத்தை தொலைச்சவன் மனம் பதறக்கூடாது. சாமி ! தயவு பண்ணிக் கொடுத்திடுங்க. ' லாண்டரிக்காரன் அதற்குமேல் ஏதும் பதில் சொல்லவில்லை. வந்த துணிகளை மேற்பார்வையிடலான்ை, ஆமாம், ஏன் இந்தத் தடவை துணி மங்கலாக இருக்கு?” சேத்துப்பட்டே அடை மழையிலே சேருப் போச்சிங்க களே. உங்களுக்கு தெரியாதா சாமி ? ' துணிகளை எண்ணிக் கொண்டதும் ராசாகண்ணு விடை பெற்றன். அவனுடைய மனத்தில் ஒருபுறம் மனைவியின் போக்கு பூரிப்பை உண்டு பண்ணிஞலும், மறுபுறம் புழுக்கத்தையுண்டு பண்ணத் தவறவில்லை. எப்படியோ தேடி வந்த செல்வம் ஓடி விட்டது ! 奖 홍 용 லாண்டரியின் சொந்தக்காரன் அன்று லாகவமாக இஸ்திரிப் பெட்டியை ஒட்டிக் கொண்டிருந்தான். தினமும் பீடி பிடிக்கும் அவன், அன்று சிகரேட்டைப் புகைத்துக் கொண்டிந்ந்தான். எதிரே அமாவாசைச் சோற்றுக் காக்கைகள் போல், பசை யுள்ள இடத்தில் கொட்டமடிக்கும் நண்பர் குழாம் குஷியாகப் பேச்சில் ஈடு கொடுத்துக் கொண்டிருந்தது. பக்கத்துத் தேநீர்க் கடையிலிருந்து அரை மணிக்கு ஒருதடவை நான்கு ‘கப் தேநீர் வரவழைக்கப்பட்டது. மூன்ரும் காட்சி சினிமா பார்த்த ஜோரோடு நேரே லாண்டரிக்கு வந்து வேலை பாரத்த சொந்தக் காரைேடு, தாங்களும் கண்விழிப்பதில் என்ன கெட்டுப் போய்