பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புதிய கந்தன் மனத்தின் முன் ச்ரெளதியின் அன்புதான் நின்றது; கொள்கைகள் பறந்தன. ஒரு தடவை ஆதனூருக்கு வந்திருந்தான். அப்பொழுது கருப்பனின் மகளுக்கு வயது வந்து விட்டது. நல்ல இயற்கையின் பூரண கிருபை இருந்தது. ஒரு நாள் இரவு நல்ல நிலா. தோட்டத்திற்குச் சென்ருன். இரவு கொஞ்ச நேரந்தான். அதுவும் ஆதனூரில் கேட்க வேண்டுமா? தோட்டக் கிணற்றில் யாரோ குதிப்பது போல் சப்தம். ஒடிப் பார்க்கிருன் : ஒரு பெண் உள்ளே அவனுக்கு ஒன்றும் தெரிய வில்லை; உடனே அவனும் குதித்தான். சாமி, கிட்ட வராதிங்க, பறச்சி, கருப்பன் மவ, சும்மானச் சிங் குளிக்கறேன் ' என்ற குரல். சரி சரி, நீ விழுந்து விட்டாயாக்கும் என்று நினைத்தேன்: ஏறி வா என்று கரை ஏறினன். - இல்லை, சாமி ' என்று தயங்கினுள் பிறகு 67T657 ? இயற்கை இருவரையும் வென்றது. ராமநாதனுக்கு,... பிறகு ஒரு மகத்தான பாபம் செய்து விட் டோம் என்ற நினைப்பு. கருப்பன் மகளுக்கு, சின்னப்பண்ணையின் தயவு கிடைத்ததில் திருப்தி. ராமநாதன் அவளைக் கலியாணம் செய்து கொள்வதாக வாக் களித்தான். அதெப்படி முடியும் சாமி என்று சிரித்தாள். கருப்பனிடம் போய் நடந்ததைச் சொல்லிப் பெண்ணைக் கொடுக்கும்படிக் கேட்டான். அவனுக்குப் புதிய கொள்கைகள் எப்படித் தெரியும் ! ' அது நயிந்தோ மகாப் பாவம். கண்ணுணே அப்படிச் செய்யக் கூடாது, ' ராமநாதனுக்கு இடி விழுந்தது போலாயிற்று. 5 மகாத்மா காந்தி தென்னுட்டில் ஹரிஜன் இயக்கத்திற்காகப் பிரசாரம் செய்ய வந்தார். ஆதனூரில் ஐத்து நிமிஷம் தங்குதல். எல்லாம் ராமநாதனின் ஏற்பாடு. ச்ரெளதிகள் அவருடன் வாதம் செய்ய புராண அத்தாட்சிகளுடன் தயார். இதில் ச்ரெளதி களுக்கு இரட்டை வெற்றி என்ற நம்பிக்கை. ஒன்று, காந்தியின்