பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவி. மணிசேகரன் 285 விட்டது? பத்து ரூபாய் நோட்டு ஒரே நாளில் பறந்ததே ! இத்த நண்பர்கள் கண் விழிக்கும் உதவிக்குக் கூடவா தகுதி யற்றவர்கள்? பாவம் ! ஏகாலி ராசாகண்ணு அனுபவிக்காத அந்த ரூபாயை எடுபிடிகளின் சொல்லைக் கேட்டு அனுபவிக்கலானுன் லாண்டரிக்கு உடையவன். 兴 兴 * அப்போது அவர்கள் தாங்கள் பார்த்துவந்த சினிமாவைப் பற்றிய பேச்சில் மூழ்கியிருந்தார்கள். அதன் கதாநாயகனின் வர்ணனையில் உறங்காத கண்களுடன் உறக்கம் கண்டனர். கார்ப்பரேஷன் கடிகாரம் கனத்த குரலில் இருமுறை இனிமை யாக அலறியது. வீதி வழியே அவ்வப்போது பூகம்ப யந்திர ரிக்ஷாக்கள் இரவின் அமைதிக்கு எதிரியாகிக் கொண்டிருந்தன. கதாநாயகியின் அழகில் கண் சொக்கி வாய் மறந்து நண்பர் களை நோக்கித் திரும்பிய லாண்டரியின் சொந்தக்காரன், சில விநாடிகள் சென்று தீய்ந்த வாசனை வரவே சுய நினைவுக்கு வர லானன். திரும்பினன் அவனுடைய மனம் பகீரென்றது. அழகான மைசூர் சில்க் Gశాడి.తవr மத்தியில் இஸ்திரிப் பெட்டியை நிறுத்திவிட்டுப் பேசியதால் ஏற்பட்ட நஷ்டம்தான் ! ஏகாலி ராசாகண்ணு நான்கு தினங்கள் கழித்துத் துணி யெடுக்க லாண்டரிக்கு வந்தான். அவன் எடுக்க வேண்டிய துணிகளை எண்ணிவிட்டு மூட்டை கட்டிக்கொண்டு புறப்பட லானன். அப்போது லாண்டரிக்குடையவன் ' ராசாகண்ணு !' என்றழைக்கவே நின்று திரும்பினன், இந்தா இந்த சில்க் சேலையை நீயே எடுத்துக் கொள் ’’ ராசாகண்ணு புரியாமல் விழித்தான். ராசாகண்ணு ! நீ கொடுத்த பத்து ரூபாயை, நானே எடுத்துக் கொண்டதற்காக கிடைத்த தண்டனையப்பா. உன்னைப் போல் நல்ல குணம் எனக்கேற்படாததால், செலவு செய்து விட்டேன். அதனால், எந்த மனிதன் பத்து ரூபாயை விட்டானே, அவன் வீட்டு சேலையையே ஞாபக மறதியாகத் தீய்த்து விட் டேன். கடைசியில் நான் சேலைக்கான அபராதம் பத்து ரூபாய் செலுத்த வேண்டி இருந்தது. முதலிலேயே அந்த மனித னுடைய பத்து ரூபாயைக் கொடுத்திருந்தால் சன்மானமாக இரண்டு ரூபாயாவது கிடைத்திருக்கும். இப்போது பத்து ரூபாய் நஷ்டத்திற்கு நஷ்டம்; நீ கொடுத்த பத்து ரூபாயைப் பாவிப் புயல்களுடன் சேர்ந்து வீணுக்கியது வேறு. உன் நெஞ்சத் 'தால் என்னைத் திருத்தியதற்காக இந்தப் பழஞ் சேலையை உனக்கே தந்து விடுகிறேன்.'