பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 28 கங்கை இன்னும் வற்றிவிடவில்லை பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் தாய்நாட்டுக்குத் திரும்புகிறவனுடைய மன நிலையை உங்களால் அதுமானம் செய்ய முடியுமானல்தான் என்னுடைய மன நிலையைச் சரியாக நீங்கள் புரிந்து கொள்ள முடியும் ! நான் ஓர் இந்தியன் என்று மட்டும் சொல்லிக் கொள்வதைவிட, இந்தியன் என்று சொல்லிக்கொள்வதிலேயே பெருமைப்படுகிறவன்-என்று சொல் வதுதான் பொருத்தமாக இருக்கும். வெளிநாட்டு வர்த்தகக் கம்பெனி ஒன்றில் பணி புரியும் நான் அநேகமாக உலகின் எல்லா முக்கிய நகரங்களிலும் சில மாதங்களாவது இருந்திருக்கிறேன். உலகிலுள்ள எல்லா முக்கிய நதிகளின் தண்ணீரையும் ருசி பார்த்திருக்கிறேன். ஆனாலும் எனக்கு என்னுடைய இந்திய நகரங்களின் மேல் தான் தீராக்காதல். ஆயிரம் நதிகள் ஒடுகிற இடங்களைப் பல்லாயிரம் முறை சுற்றிப் பார்த்தாலும் என் இதயத்தில் என்னவோ கங்கைதான் ஒடிக்கொண்டிருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்குமுன் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்த ஒரு முன்மாலை வேளையில் ஹரித்துவாரத்தில் கங்கைக் கரையில் படிக்கட்டில் உட்கார்ந்து முழங்காலளவு நீரில் நனைய மணிக்கணக்காக நான் கங்கையைப் பார்த்துக் கொண்டிருந்ததுண்டு. இந்த விநாடியிலும், எந்த விநாடியிலும் நான் அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதாக எனக்குள் ஒரு பாவனை, அன்று அந்த முன்மாலை வேளையில், நேர்ந்துகொண்டவர்கள் தொன்னைகளில் ஏற்றி மிதக்கவிட்ட அகல் விளக்குகள் கங்கையில் அங்கங்கே மிதந்து கொண் டிருந்தன. ஒருபுறம், மலைச்சரிவு, ஆசிரமங்களின் கட்டிடங்கள், குளிர்ந்த காற்று, சின்னஞ்சிறு விளக்குகள் மிதக்கும் கங்கை பார்க்கச் சலிப்படையாத காட்சி. கங்கை என் உடம்பை நனைக்