பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 கங்கை இன்னும் வற்றிவிடவில்லை கும் போதெல்லாம் என்னுள்ளிருக்கும் சத்தியமும், தர்மமும், கருணையும் கிளர்ந்திருக்கின்றன. உலகத்தின் மாபெரும் நதிகளுக் கும் என் கங்கைக்கும் ஒரு வேறுபாடு உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தேசத்தின் பூர்வ கால ஞானி கள் சத்தியத்தையும், தர்மத்தையும்-அவையிரண்டின் விளை வாகிய கருணையையும்-கங்கையின் கரைகளில் தான் கண்டு கொண்டார்கள். கங்கையின் ஒரு கரை சத்தியம். மறுகரை தர்மம். நடுவே ஓடும் கங்கைதான் கருணை-என்று உணர்ந்தவன் நான். என்னுடைய தேசத்தின் புனித உணர்வுகள் எல்லாம் இந்த நதியின் பிரவாகத்தோடு உடனிகழ்ச்சியாகப் பிரவாகித் தவை என்பதை நான் அறிவேன். இந்த நதி பெருகுகிறவரை இதன் கரையில் அல்லது கரை யாக ஏற்படுத்தப்பட்ட சத்தியமும், தர்மமும் என் தேசத்தை விட்டுப்போய்விட முடியாது என்பதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் மறுபடி யும் நான் எதற்காக இந்தியாவுக்குப் புறப்படுகிறேன் தெரியுமா ? சொன்னல் ஒருவேளை நீங்கள் சிரிக்கலாம், அல்லது என்னைப் பைத்தியக்காரன் என்று நினைக்கலாம். ஹரித்துவாரத்தில் இரண்டு நாட்கள் கங்கைக் கரையில் இருந்துவிட்டு வரவேண்டும். ஊரில் எனக்கு உறவினர்கள், வீடு, வாசல், தாய், தந்தை, யாரும் கிடையாது. இப்போது வயது நாற்பத்திரண்டு. இது வரை திருமணமும் ஆகவில்லை. அப்படி ஓர் ஏற்பாட்டிற்கு இனி அவசியமும் இல்லை. ஊர்சுற்றுகிறவனல் குடும்பத்தைக் கட்டிக்காக்க முடியாமற் போனலும் போகலாம். எனக்குப் பூர்வீகம் இராமநாதபுரம் மாவட்டத்தில் சாத்துார் தாலுகாவில் ஒரு சிறிய கிராமம். அந்தக் கிராமம் இப்போது இருக்கிறதோ இல்லையோ? இளம்வயதில் தாய்தந்தையரை இழந்துவிட்ட என்னை ஜில்லா போர்டு பள்ளி ஆசிரியரான என் தாய்மாமன் வளர்த்துப் படிக்கவைத்து ஆளாக்கினர். அவரும் ஒரு ஊர் மாற்றுகிற ஜில்லாபோர்டு உத்தியோகத்திலே இப்போது எந்த ஊரில் இருக்கிருரென்று எனக்குத் தெரியாது. படித்ததும் டெல்லியிலுள்ள வெளிநாட்டு வர்த்தகக் கம்பெனியின் கிளை ஒன்றில் வேலை கிடைத்தது. பிறகு அதே கம்பெனியில் ஸ்டெனே கிராபராக முடிந்தது. கம்பெனிக் காரர்களுக்கு என்னை மிகவும் பிடித்ததனுல் பதவிஉயர்வு கொடுத்தார்கள். கல்கத்தா, பம்பாய், ஹைதராபாத், பங்களுர் ஆகிய நகரங்களில் ரீஜனல் மானேஜ ராகச் சிறிதுகாலம் இருக்கச் செய்தார்கள். பிறகு வெளிநாட் டுக்குப் போகச் சம்மதமா என்று கேட்டார்கள். புறப்பட்டு விட்டேன். டில்லியிலிருக்கும்போது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது ஹரித்துவாரம் போய்வருவேன்.