பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 289 அதே ஹரித்துவாரத்தைப் பன்னிரண்டு வருடங்களாகக் காணுமல் இருந்துவிட்ட தவிப்புடன் இப்போது ஊர்திரும்பு கிறேன். இப்போது நான் வேலை பார்க்கிற இடம் தாய்லாந்தி லுள்ள பாங்காக் நகரம். அரிய முயற்சியுடன் இந்தியா சென்று வருவதற்காகக் கம்பெனியில் பதினைந்து நாள் லீவுவாங்கியிருக் கிறேன். என்னுடைய தேசத்தைப் பற்றிப் பத்திரிகைகளில் நான் படிக்கும் செய்திகள் எனக்குத் திருப்தியை அளிக்கவில்லை. முந்தா நாள் மாலை ஒரு யூதன் என்னைக் கேட்டான் : யூ ஆர் இண்டியன் ! ஐ ஹேட் இண்டியன்ஸ்...என்று தொடங்கி உங்களை வெறுத்து அவமானப்படுத்தும் சீனவுடன் கூட நீங்கள் டிப்ளமேடிக் உறவுகளை விடவில்லை. ஆனல் இஸ்ரேலுடன் உறவுகளை விட்டுவிட்டீர்களே?’ என்று ஆங்கிலத் தில் கோபமாக வினவினன் அவன். பொறுத்திருந்து பார், நண்பனே ! எனது நாடு கங்கை பாயும் நாடு. எனது நாட்டில் கங்கை இன்னும் வற்றிவிடவில்லை. நாங்கள் யாருக்கும் கெடுதல் செய்யமாட்டோம்...' என்று ஆங்கிலத்தில் சாந்தமாக மறுமொழி கூறினேன். " யார் கண்டார்கள் ? உங்கள் கங்கை ஒருவேளை இப்போது வற்றியிருக்கலாம் ' என்று மறுபடியும் கோபமாகவே ஆங்கிலத் தில் இரைந்தான் அவன். ஒருநாளும் இல்லை’ என்றேன் நான். அவன் என் பதிலில் திருப்தியடையவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் நான் டோக்கியோவில் இருந்த போது, கிராண்ட் ஒஸாகா பார் இல் எனக்கும் ஒரு ஜப்பா னியனுக்கும் சண்டையே மூள இருந்தது. " உனது இந்திய நகரங்களில் இரவு சூனியமாக இருக்கிறது, பெரிய நகரங்கள் கூட இரவில் இருளடைந்து கிடக்கின்றன. இரயில்கள் சுத்தமாக இல்லை, டாக்ளிகளோ அழுக்கு மயம்...ஹாங் காங், டோக்கியோ போல் இரவில் ஒளிமயமாக மின்னும் நகரம் ஒன்று கூட உன் இந்தியாவிலே இல்லை' என்ருன் அவன். ' உங்களைப் போல் வெளிச்சம் போட எங்களுக்குத் தெரி யாது’ என்றேன். நான். நோ.நோ...யூ ஆர் ராங். ஏ. ஸிடி இஸ் லைக் எ வுமன். ஷி மஸ்ட் ஹேவ் ப்யூடி, ப்ரைட்னெஸ் அண்ட் ஆல் கைண்ட் ஆஃப் அட்ராக்ஷன்ஸ்...வி மஸ்ட் ட்ரைடு கெட் அட்டென்ஷன் ஆஃப் அதர்ஸ், என்ருன் அவன், «Бт~~19