பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 கங்கை இன்னும் வற்றிவிடவில்லை இந்தியப் பெண்களும் அப்படி இல்லை. இந்திய நகரங் களும் அப்படி இருக்க முடியாது...எங்கள் நாட்டில் கங்கை இன்னும் வற்றிவிடவில்லை...... என்று ஆத்திரத்தோடு பதில் கூறினேன் நான். குடிவெறியில் அவன் என்னைக் கண்டபடி திட்டினன். ஆனல் அவன் அன்று கூறியதில் ஒருபகுதி உண்மை என்பதை இன்று பாங்காக்கிலிருந்து இரவு விமானத்தில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டபோது தற்செயலாக உணர்ந்தேன். பாங்காக் விமான நிலையத்திலிருந்து விமானம் மேலெழும்பிய போது கீழே வண்ண வண்ண ஒளிகளை வாரிவீசிய நகரின் இரவுத் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. கண்ணுக் கெட்டிய தூரம் வரை பளிச் பளிச் சென்று மின்னும் பல நிற வைரக்கற்களை நெருக்கமாக வாரிக் குவித்ததுபோல் எத்தனை அழகான காட்சி! இந்திய நகரங்களுக்கு இத்தனை ஒளிக்கவர்ச்சி இல்லைதான் ! வேண்டுமானல் கல்கத்தா பம்பாய் சென்னை டில்லி போன்ற சர்வதேச நகரங்கள் கொஞ்சம் பிரகாசமாக இருக்கலாம். ஆனல் அவைகளும் டோக்கியோ, நியூயார்க், லண்டன், பாரிஸ், பெர்லின், பாங்காக், ஹாங்காங், சிங்கப்பூர் போல அவ்வளவு ஒளிமயமாக இருக்க முடியாது தான் ! உலகின் சர்வதேச நகரங்களிலுள்ள கவர்ச்சிகள் என்னுடைய ஏழை இந்தியாவில் இல்லாமல் போகலாம், ஹோனலூலுவின் இரவு விடுதிகள், பாரீஸின் பகட்டு, நியூயார்க்கின் நேர்த்தி, பாங்காக்கிலும், மலேயாவிலுமுள்ளவை போல் அழகிய சாலை கள், ஜெர்மனியின் ஆட்டோபான் ரோடுகள் போல எல்லாம் என் இந்தியாவில் இருக்க முடியாது. ஆனல் என்னுடைய இந்தியாவில் கங்கை இன்னும் ஒடுகிறது. இன் நறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே -என்று நான் தலைநிமிர்ந்து கூறமுடியும். ஒரு தேசத்தின் பண்பாடாகவே பெருகிவரும் இத்தகைய புனிதநதி உலகில் வேறெங்குமே இருக்க முடியாது. ஒவ்வொரு இந்தியனுடைய மனத்திலும் கங்கை சுரக்கும் போது அது கருணையாகவே சுரக்கிறது. நீண்ட நாட்கள் அடிமைப்பட்டுக் கிடந்தபின் முதல் முதலாக எங்கள் காந்தியின் மனத்தில் கங்கை சுரந்தது. அது கருணையாக, விடுதலை வேட்கையாக, தரித்திர நாராயணர்களுக்கு உதவும் நெகிழ்ச்சி யாகச் சுரந்து பாரத தேசமெங்கும் பெருகி நனைத்தது. அதே கங்கை இன்னும் வற்றியிருக்காது அல்லவா? - பாங்காக்கிலிருந்து புறப்பட்ட விமானம் பினங்கில் இறங்கு கிறது. என் பக்கத்தில் அமர்ந்திருந்த மலாய்க்காரர் விமானத்