பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 29 i திலிருந்து இறங்கத் தயாராகிருர். பினங்கு விமான நிலையத்தில் கொஞ்சம் இறங்கி நிற்கலாம் என்று தோன்றவே நானும் இறங்கினேன். இறங்கும் போது விமானப் பணிப்பெண் மலாய்க் காரரை வாழ்த்தி வழக்கமான உபசரணைச் சொற்களை உரைத்து விடை கொடுக்கிருள், த்ரி மா காஸி (உதவிக்கு நன்றி) என்று மலாய் மொழி யில் மெல்லக் கூறிவிட்டு நிதானமாகப் படியிறங்குகிருர் மலாய்க்காரர். பினங்கு நாற்புறமும் கடல் சூழ்ந்த தீவு. மிக அழகான-சுத்தமான-துாசி படியாத நகரம். நான் பலமுறை பார்த்திருக்கிறேன். மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக இருக் கும் நகரம் என்ற ஞாபகம் வரவே அந்த விநாடியே என் மனத் தில் கங்கை சுரந்தது. மறுபடி விமானம் புறப்பட்டது. கோலாலும்பூரில் இறங்கி வேறு விமானம் மாறிச் சிங்கப்பூருக்குப் போக வேண்டும். கோலா லும்பூரில் சிங்கப்பூர் போகிற மலேசியன் ஏர்வேஸ் விமானம் தயாராயிருக்கும். நினைத்துக் கொண்டிருக்கும் போதே விமானம் கோலாலும் பூர் கபாங் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி விட்டது. கோலாலும்பூர் விமான நிலையத்தில் இறங்கி சிங்கப்பூருக்கு விமானம் மாறியபோது என்னுடன் முத்திருளப்பன் என்பவர் பயணம் செய்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்ததில், தமிழ்நாடு தலை எடுக்கமுடியாமல் வடவர் ஆதிக்கமும், வட இந்திய ஆதிக்கமும் தடுத்து வருவதாக "க் குறைப் பட்டுக் கொண்டார். " அப்படிச் சொல்லாதீர்கள், ஏகஇந்தியா என்ற மனப் பான்மையை நாம் வளர்க்க வேண்டும். பிரதேச மனப்பான்மை நமது ஒற்றுமையைக் குலைத்துவிடும் ' என்றேன். நான். சும்மா நாமாக அப்படி நினைத்துக் கொண்டிருக்க வேண் டியதுதான். அவனவன் தன் பிரதேசத்துக்காக மற்றவர்களைச் சுரண்டுகிருன் என்ருர் முத்திருளப்பன். சுதந்திரம் பெற்றுக் கால் நூற்ருண்டு நிறைவதற்குள் தான் எத்தனை அபிப்ராய பேதங்கள் ? எத்தனை ஒற்றுமைக் குலைவுகள்? “ என்று எண்ணிய போது தேசத்தையே தெய்வ மாக நினைக்கும் என் கண்களில் ஈரம் நெகிழ்ந்தது. எனது தேசத்தில் கங்கை வற்றி விட்டதா? என்ன? . சிங்கப்பூர் விமான நிலையத்தை அடைந்ததும் அதிர்ச்சி தரும் ஒரு செய்தி எனக்காக அங்கே அப்போது காத்திருந்தது: