பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 கங்கை இன்னும் வற்றிவிடவில்லை சிங்கப்பூரிலிருந்து அடுத்த மூன்று நான்குமணி நேரத்தில் அன்றிரவே சென்னை போய்விடலாம் என்று எண்ணியிருந்த என் எண்ணத்தில் மண் விழுந்தது. ஏர் இந்தியா விமானிகள் திடீரென்று வேலை நிறுத்தம் செய்துவிட்டதால் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா செர்வீஸ் இல்லை ' என்று அறிவிக்கப்பட்டது. நான் திகைத் தேன். அப்போது அங்கே என் காது கேட்கவே ஏர் இந்தியா வைக் குறை சொல்விப் பேசிய வெளிநாட்டுப் பயணிகளின் சொற்கள் என்னைத் தலைகுனிய வைத்தன. "இந்திய விமானக் கம்பெனியில் மட்டும் திடீர் திடீரென்று இப்படி மூன்று நாளேக்கொருதரம் ஸ்டிரைக் வந்து விடும். இந்திய விமானத்தை நம்பினல் தெருவில் நிற்க வேண்டியது தான் ' என்று ஒரு வெள்ளைக்காரன் மற்ருெருவனிடம் கூறி யதைக் கேட்க எனக்கு அவமானமாக இருந்தது. தேசத்தின் மேலுள்ள பிரியத்தைத் தெய்வத்தின் மேலுள்ள பிரியத்தைவிட அதிகமாக வளர்த்துக்கொண்டு விட்ட என் இதயத்தில் நித்திய மாக ஓடிக் கொண்டிருந்த கங்கை அந்த விநாடியே மெல்ல மெல்ல வற்றுவது போல் ஒரு பிரமையை உணர்ந்தேன். ' பி. ஒ. ஏ. சி. விமான மூலம் கொழும்பு போய் அங்கிருந்து சென்னைபோக விரும்புவதானல் அதற்கு உடனே ஏற்பாடு செய்து தருவதாக விமானக் கம்பெனிக்காரர்கள் கூறினர் கள். நானே இந்திய விமானத்திலேயே செல்ல விரும்பினேன், வேறு வெளிநாட்டு விமானத்தில் போவதானல் கல்கத்தா போய்ச் சேரக்கூட உடனே ஒழுங்கு செய்யமுடியும் ' என்றும் கூறப்பட்டது. "இல்லை! நான் சிங்கப்பூரிலேயே சில நாட்கள் தங்கிப் பின்பு செல்கிறேன். அதற்குள் ஸ்டிரைக் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்” என்றேன். - சிங்கப்பூரில் நான் சவுத் ஈஸ்ட் ஏஷியா ஒட்டலில் தங்கி னேன். பக்கத்து அறையில் ஃப்ராங்பர்ட்டைச் சேர்ந்த வர்த் தகக் கம்பெனி ஒன்றின் பிரதிநிதியாகிய ஜெர்மானியன் ஒருவன் தங்கியிருந்தான். அவனோடு எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. பழகத் தொடங்கிய சிலமணி நேரங்களுக்குள்ளேயே அவன் என்னைக்கேட்ட முதல் கேள்வி: உங்கள் நாட்டில் பீகார் மாநிலத்தில் தினம் ஆயிரக் கணக்கான மக்கள் உணவுப் பஞ்சத்தினல் செத்துப் போய்க் கொண்டிருக்கிருர்களாமே ? '