பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. பார்த்தசாரதி 29.3 பஞ்சம் இருக்கலாம் ! ஆனல் அந்தச் செய்தி உங்களுக்கு மிகையாகத் திரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது ' என்றேன். நோ, நோ, ஐ யாம் டெல்லிங் தி ட்ரூத், ஐ லா இட் இன் டெலிவிஷன். ' என்ருன் ஜெர்மானியன். டெலிவிஷனில் வெளிநாடுகளில் எங்கள் நாட்டைப்பற்றிக் காண்பிக்கிற எல்லாமே மிகைப்படுத்தப்பட்டவை. இரவில் ரெயில்வே பிளாட்பாரத்தில் போர்த்திக்கொண்டு தூங்குகிற ஏழை மக்களையும், நடைபாதை வாசிகளையும் படம்பிடித்து இதோ பாருங்கள் ! இந்தியாவில் பஞ்சத்தினல் மக்கள் கூட்டம் கூட்டமாகச் செத்துக் கிடக்கிரு.ர்கள், என்றெல்லாம் கூடக் காட்டுகிறீர்கள். ஒரு கெளரவமான இந்தியன் என்ற முறையில் அதை நான் ஒப்புக்கொள்ள முடியாது ' என நான் கூறியதை அவன் ஒப்புக்கொள்ளவில்லை. மறுநாள் மாலை சிங்கப்பூரில் நிரந்தரமாக நடைபெறும் கிரேட் வோர்ல்ட் பொருட்காட்சியைப் பார்க்கப் போயிருந்த போது தற்செயலாக ஒர் அமெரிக்க டுரிஸ்ட்டைச் சந்தித்தேன்; அவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ' உங்கள் இந்தியாவில் மகாராஜாக்களும், பாம்பாட்டி களும் தான் நிறைய இருக்கிருர்களாமே? பெரிய நகரங்களில் விக்கர் கூடக் கிடைக்காதாமே ? ' என்ருன். இதைக் கேட்டதும் எனக்கு வெளிநாடுகளில் உள்ள இந்தி யத் துரதுவரகங்களின் மேல் தாங்கமுடியாத கோபம்தான் வந்தது. இந்தியாவைப்பற்றி நல்ல முறையில் செய்திகளைப் பரவச் செய்யாமல் தூங்கும் இந்தியத் துTதரகங்களால் வருகிற வினை இது. தாஜ்மகாலிலிருத்து தஞ்சைக் கோயில்வரை இமய மலையிலிருந்து கோடைக்கானல் வரை-கங்கைக் கரையிலிருந்து காவிரிக்கரை வரை இந்தியாவைப்பற்றி அழகிய படங்களோடு கூடிய பிரசுரங்களையும் ஃபோல்டர்களையும் விநியோகித்து உலக யாத்திரிகர்களைக் கவரத் தெரியாத நிலைக்காக வருந்தினேன். இந்தியாவிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் செயல்படும் விதத்தைப் பார்த்தும் வெளிநாடுகளிலுள்ள இந்தியத் துரத ரகங்கள் உறங்குவதை என்னவென்று சொல்வது ? எனது மாடரும் தேசத்தில் கங்கை பாய்வதை டெலிவிஷ னில் காட்டாதவர்கள் சாக்கடை பாய்வதை மட்டும் காட்டி ஏன் இழிவு படுத்துகிருர்கள்?’ என்று மனம் நொந்தேன். காளிதாசன், கம்பன், துளசிதாசர், தாகுர், பாரதி-போன்ற கவிமேதைகளும், வள்ளுவர், காந்தி, நேரு, சுபாஷ் போன்ற தேசபக்த மேதைகளும் எங்கள் பாரத பூமியினர் என்பதைக்