பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝9垒 கங்கை இன்னும் வற்றிவிடவில்லை காட்டிலும் பாம்பாட்டிகளும், மகாராஜாக்களும் பிரபலமாகி யிருப்பதைக் கேட்டுத் தலைகுணிந்தேன் தான். ஆளுலும்கூட ஓர் இந்தியன் என்று சொல்விக்கொள்ள நான் தயங்கவில்லை, தளரவில்லை, என் இதயத்தில் கங்கை வற்றுகிற வரை அது தளராது. கங்கை இன்னும் அங்கே வற்றி விடவில்லையே? ஐந்து நாட்கள் கழிந்து விட்டன. நான் எடுத்த விடுமுறை யில் இன்னும் பத்தேநாட்கள் தான் மீதமிருக்கின்றன. பதி னேராவது நாள் காலை விடிந்தால் நான் மறுபடி பாங்காக்கில் இருக்க வேண்டும். சென்னேவரை செல்வதற்கும், சென்னையி லிருந்து திரும்புவதற்கும்தான் விமானப் பயணம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். சென்னையிலிருந்து டில்லி, டில்லியிலிருந்து ஹரித்துவார் எல்லாம் இரயில் பயணம்தான் செய்யவேண்டும். சிக்கனத்திற்காக அல்ல ; என் தாய்நாட்டு மண்ணேப் பறந்தே கடக்க விருப்பமில்லை. சென்னையிலிருந்து டில்லிவரையும் டில்லி பிலிருந்து ஹரித்துவார் வரையும் இரயிலில் சென்ருல்தான் எனது தாய்நாட்டின் வாழ்க்கை வனப்புகளை. அல்லது துயரங் களே நான் அறியமுடியும். அதை இழக்க விரும்பாமல்தான் இந்திய மண்ணை அடைந்தபின் முழுவதும் இரயில் பிரயாணமே செய்ய விரும்பினேன். இரயில் பயணம் நாட்களை விழுங்கும். என் லீவிலே மீதமிருப்பவையோ பத்தே நாட்கள். என்ன செய்யலாம்? “ என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது இந்திய விமானக் கம்பெனியிலிருந்து ஃபோன் வந்தது. இன்றிரவில் ஏர் இந்தியா, செர்வீஸ் மறுபடி தொடங்குகிறது. பயணத்துக்குத் தயாராயிருக்கவும் என்ருர்கள். உற்சாகமாகப் பயணத்துக்குத் தயாரானேன். - இந்திய நேரப்படி ஒன்பது மணி நாற்பத்தைந்து நிமிடங் களுக்குச் சென்னையிலிருப்போம் என்று தினேக்க நினைக்க மகிழ்ச்சி யாயிருந்தது. - . . . . . . . சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானம் மேலெழும்பிய போது கீழே தெரிந்த ஒளிமயமான நகரக்காட்சி மறுபடியும் என் அருமை. இந்திய நகரங்களின் நினேவை உண்டாக்கியது. விமானத்தில் அருகில் அமர்ந்திருந்த ஆங்கிலப் பெண்மண் திடீ ரென்று தான் படித்துக்கொண்டிருந்த ஏதோ ஒர் ஆங்கிலச் செய்தித்தாளேக் காட்டி, ' இது உண்மையா ? இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் நக்ஸல் பாரி என்ற இடத்தைச் சீனர் கள் கைப்பற்றி ஆள்கிரு.ர்களாமே...?' என்று வியப்போடு வினவினுள். ' அது உண்மையாயிருக்காது டோண்ட் 3ಿಳಿಸು ரூமர்ஸ்...' என்று மறுமொழி கூறினேன். அதே சமயத்தில் என் மனம்