பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் i 3 கொள்கையைத் தகர்ப்பது, இரண்டாவது காந்தியின் முன்பே தன் புத்திரனிடம் சனதனத்தின் புனிதத்தைக் காண்பிப்பது. தோழர் நரசிங்கம் காந்தியை எதிர்த்துக் கேள்விகள் கேட்க ஆதனுாருக்கு வந்தான். தங்கையின் சமாசாரம் தெரிந்துவிட்டது. தகப்பனரிடம் கலியாணம் செய்து வைத்துவிட வேண்டுமென்றும் அதற்குப் பறையரின் சமுதாயத்தின் கட்டுப்பாட்டால் செய்ய முடியும் என்றும் தெரிவித்தான். தகப்பனரின் முட்டாள் தனமான நம்பிக்கையைத் தகர்க்க முடியவில்லை, பாப்பானின் சாயத்தைத் துவக்கி விடுகிறேன்’ என்று காத்திருந்தான். ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலிருந்த மைதானத்தில், ஒரு மேடை : கியாஸ்லேட் ; இத்தியாதி, இத்தியாதி, பெருங் கூட்டம். வெற்றி கொள்ள ஆசைப்படும் சனதனமும் அதில் கலந்திருக் கிறது. கருப்பன் கிழவன். மவாத்துமா கிழவரைப் பார்க்க ஆசை. கண் ஏது? அதென்னமோ ? குருடருக்கு என்ன செய்ய முடியுமோ? தட்டுத் தடுமாறிக் கொண்டு வந்தான். எங்கோ தன் மகன் சப்தம் போல் இருக்கிறது என்று தடுமாறிக் கொண்டு ஓடினன். மாலைகள் வந்து விட்டனவா என்று கவனித்து ஓடிக்கொண் டிருக்கும் ராமநாதன் சற்றுப் பின்னல் வந்தான். குறுக்குப்பாதை வழியாகத் தோழர் நரசிங்கம் எங்கிருந்தோ வந்து கொண்டிருந் தான். நெற்றிக் கண்ணைத் திறந்த சிவபிரான் போல் தலைப்பு வெளிச் சத்தைப் போட்டுக் கொண்டு கோஷித்துக் கொண்டு வருகிறது மதராஸ் மெயில். ஆதனூர் அதன் மரியாதைக்குக் குறைந்தது : நிற்காது. நாற்பது மைல் வேகம். என்ஜின் டிரைவர் விஸிலே ஊதுகிருன் ; கோஷிக்கிருன். குரு டன் கம்பி வழியாகவே நடக்கிருன். மனம் குழம்பி விட்டதா? துாரத்திலிருந்து இருவர் அவனைக் கண்டு விட்டார்கள். மகனும் மருமகனும் ; இயற்கைச் சட்டத்தின்படி அப்படித்தான். சமுதாயம் என்ன வேண்டுமானலும் சொல்லிக் கொள்ளட்டும். வேகமாக ஓடி வருகின்றனர். வெளிச்சம் ; வெளிச்சம், - மூவரும் சேரும் சமயம். இழுத்து விடலாம். ஐயோ !” ஹதம். ரத்தக் களரி.