பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 கங்கை இன்னும் வற்றிவிடவில்லை கஸ்டம்ஸ் பரிசோதனைக்கு முன் அரைவ்ட் இண்டியா - என்று எண்ட்ரி குறிக்கிருர்கள். கஸ்டம்ஸில் நான் வெளிநாட் டில் எந்த விமான நிலையத்திலும் பார்த்திராத முறையில் ஒரு வழிப்பறிக்காரனே விடக் கடுமையாக எல்லாவற்றையும் உதறிப் பார்த்தார்கள். இது என் பொறுமையைச் சோதித்தது. நிலையத்திற்கு வெளியே வந்ததும் டாக்ஸி பிடித்து நகருக் குள் புறப்பட்டேன், டாக்ளிக்காரன், மீட்டர் வேலை செய்யா துங்க மொத்தமா இருபது ரூபா கொடுத்திடுங்க 1’ என்ருன்: கிண்டி வருவதற்குள் அவன் என்னிடம் என்னென்னவோ கேட்டுவிட்டான். ' அருமையாவுள்ள இடங்கள்ளாம் இருக்குது சார் !...” சார் பர்மிட் வச்சிருக்கீங்களா ? பர்மிட் இருந்தா 'கன்னிமரா விலேயே தங்கலாம்...' டாக்ஸி தேளும்பேட்டையை நெருங்கியதும் தெருவில் ஒரே கூப்பாடாயிருந்தது. ஆட்கள் கம்பும் கடப்பாரைகளுமாக ஒடிக் கொண்டிருந்தார்கள் பக்கத்தில் குடிசைகள் சில எரிந்து கொண்டிருந்தன. ' என்னப்பா இது ?...' " இதுங்களா? அதான் ஊர் பூரா ஒரே காபராவாக் கிடக்குதுங்களே? ' - ' என்ன காபரா ?” எந்த நாசமாப் போறவனுவ்ளோ ஒவ்வொரு ஸ்லம்மா நெருப்பு வச்சுட்டு ஓடிடருன். யாரு என்னன்னே புரியலே ? ஊர் பூராத் தெருவிலே திண்டாடருங்க...' என் மனம் நினைத்தது : இப்படிப்பட்ட குடிசைகளில் எல்லாம் மங்கல விளக்குப் பிரகாசமாக எரிய வேண்டுமென்றல்லவா எங்கள் காந்தி இந்த நாட்டுக்கு விடுதலையை வேண்டினர் : - என் மனத்தில் ஒரு வாரத்துக்கு முன் பாங்காக்கில் அந்த யூதன் கேட்ட கேள்வி நினைவு வந்தது. யார் கண்டார்கள்! ஒருவேளை உங்கள் கங்கை இப்போது வற்றிலுைம் வற்றியிருக்லாம்.