பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 297 "ஒரு போதும் இராது. கங்கையாவது வற்றுவதாவது ? ’’ ஆனல்...? ' கங்கை பெருகியுள்ளதா? வற்றி விட்டதா என்று பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ” எங்கே சார். போகணும்...? டிரைவரின் கேள்விக்குப் பதிலாக ஒரு சாதாரண இந்திய முறையில் நடத்தப்படும் ஹோட்டலின் பெயரைச் சொன்னேன். ஏனென்ருல் சென்னையில் அதிக நேரம் தங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. மறுநாள் காலையில் நான் டில்லி புறப்பட வேண் டும். டில்லி போய் ஹரித்துவாரம் சென்று மறுபடி சென்னை திரும்பி விமானமேற ஏற்றபடி என் நாட்கள் சரியாக இருந்தன: டாக்ஸி டிரைவர் ஹோட்டலில் இறக்கி விட்டுஎண்ணி ரூபாய் இருபது வாங்கிக் கொண்டு போய்விட்டான்: அந்த ஹோட்டல் இருந்த இடத்திற்கு விமான நிலையத்திலிருந்து வர மீட்டர்படி எட்டு ரூபாய் கூட ஆகாது என்பதை நான் உணர்ந்தேன். அந்த அகாலத்தில் ஹோட்டல் ரிஸப்ஷன் அழுது வடிந்தது. அதிக நேரம் கூச்சலிட்டபின் படுக்கையிலிருந்து எழுந்த கோலத் தில் ஆஃப் டிராயருடன் மாரில் புஸ் புஸ்-வென்று ரோமம் சிலிர்த்த ஆள் ஒருவன் வந்து, என்ன சார் 1 ரூம் வேணுமா? ரூம்ஸிங்கிளா இல்லே! ... ' காட்டேஜ் இருக்கு ஒரு நாளைக்கு நாற்பத்தைஞ்சு ரூவா ஆகும்! கொடுக்கவா?’’ ரூபாயைப் பற்றி என்ன ? ரூம் கொடு...' அவன் அழைத்துக் கொண்டு போய் விட்ட இடம் கார் ஷெட் போலிருந்த ஒரு டபுள் பெட்ரூம். பாத்ரூம் உள்ளேயே இருந்தது. ஒரே நாற்றம். சுவரில் பல கறைகள். ஓர் இரவு தானே என்று பொறுத்துக் கொள்ள எண்ணினேன். காலையில் காபி கொண்டு வந்து கொடுத்த சர்வர் பையனி டம் நாலணு டிப்ஸாம் கொடுத்து ஒரு நியூஸ் பேப்பர் வாங்கி வரச் சொன்ன போது, ' சாரே ! உங்களிடம் ஒரு விஷயம் பறையனும். இந்த ரூமுக்கு மானேஜர் என்ன சார்ஜ் பண்ணி ன்ை ? ஞான் அறியலாமா?’ என்று ஆவலோடு கேட்டான். நான் பதில் கூறியதும் அவன் முகத்தில் வியப்புத் தெரிந்தது: இந்த மானேஜர் ஒரு அக்கிரமக்காரன் டபுள் ரூமுக்கு இங்கே வழக்கமான சார்ஜு பந்தரண்டரை ரூபாதான்...நீங்க வெளியூரான்னு நாற்பத்தஞ்சு கொள்ளையடிச்சிருக்கான்...'