பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 கங்கை இன்னும் வற்றிவிடவில்ல எனக்குக் கோபம் வந்தது. இந்திய டாக்ஸி டிரைவருக்கு, இந்திய ஹோட்டல் முதலாளிக்கு, இந்திய வியாபாரிக்கு, ஏன் சராசரி ஒவ்வொரு இந்தியனுக்கும் சக இந்தியனைச் சுரண்டி வாழும் மனப்பான்மை இருப்பதை உணர்ந்தேன். தான் சொகு சாக வாழ அடுத்தவனேச் சுரண்டும். தேசத்திற்கு என்று முன்னேற்றம் வரப்போகிறது என்பதை என் சிந்தனையால் கணிக்க முடியவில்லை. ஏ ! இந்தியாவே ! உன் பழம்பெருமை. வாய்ந்த கங்கையும் அதன் சத்திய தர்மக் கரைகளும் வற்றிப் போய் விட்டனவா ? செய்தித் தாள் வந்தது. விஜயவாடாவுக்கு அருகே ஆந்திர மாணவர்கள் ஏதோ பெருங் கிளர்ச்சி நடத்துவதால் ரயில்கள் வழிமறிக்கப் படுகின்றனவாம். அதனுல் நான்கு நாட்களுக்குச் சென்னை செண்டிரலிலிருந்து டில்லி, கல்கத்தா ரயில்கள் புறப் படாது என்றிருந்தது. இப்போது எனது நிலை தர்மசங்கடமாகி விட்டது. என்ன செய்வதென்று யோசித்தேன். திரும்புகாலே யில் டில்லியிலிருந்து விமானத்தில் திரும்பினுல்கூடத் திட்டம் சரி யாக வருமா என்று தயக்கம் தோன்றியது. ஆனல் மனம் என்னவோ சரியாக இல்லை. செய்தித் தாளைக் கூர்ந்து கவனித்துப் படித்த போது பல விவரங்கள் தெரிய வந்தன. சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திரம் கிடைத்த உடனே யும், ஒரு இந்தியன் அவன் வங்காளியாயிருந்தாலும், மலையாளி யாயிருந்தாலும், பீஹாரியாயிருந்தாலும், தமிழனயிருந்தாலும், ஆந்திரளுயிருந்தாலும்-தான் முதலில் இந்தியன் என்பதை மனப் பூர்வமாக நம்பினன், உணர்ந்திருந்தான். இன்று அந்த மனத் திடம் ஒவ்வொரு மாநிலத்திலும் நலிந்து விட்டத்ாகத் தோன்றி யது. கல்கத்தாவிலுள்ள கேராவ் வேலை நிறுத்தங்கள் திடுக் கிட வைப்பனவாயிருந்தன. பம்பாயின் சிவசேன பயமுறுத்தி யது. பக்கம், பக்கமாகக் கதவடைப்பு, வேலை நிறுத்தம், பீகார்ப் பஞ்சத்துக்கு உதவ வேண்டுகிற பிரதம மந்திரியின் அறிக்கை எல்லாவற்றையும் பார்க்கப் பார்க்க எனது இந்தியாவை நினைத் துக் கோவென்று கதறி அழ வேண்டும் போலிருந்தது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இமயம் முதல் குமரி வரை ஒற்றுமைப்பட்டு வெள்ளையனே வெளியேறு என்று குரல் கொடுத்ததெல்லாம் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படிப் படிப் படியாக மொழியின் பெயரால், பிரதேசத்தின் பெயரால், ஜாதி யின் பெயரால் வேறுபடுவதற்காகத்தான ? இன்று வேறு படுவ தற்காகவா அன்று ஒன்றுபட்டோம் ? - • . ஏ இந்தியாவே ! உன் கங்கை ஒரு வேளை வற்றி விட்டதோ ? வறண்டு விட்டதோ ? - *