பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. பார்த்தசாரதி 29 % நான்காம் நாள் காலை இரயில்கள் புறப்படு மென்று தெரிந் தது. பன்னிரண்டு மணிக்கு மேல் கிராண்ட்ரங்கில் டில்லி புறப் பட வேண்டும். அன்று வெள்ளிக்கிழமையாதலால் காந்தி மண்டபத்துக்குப் போய்வர எண்ணினேன். நான் தங்கியிருந்த ஹோட்டல் வாசலில் ஒரு டாக்ளி பிடித்து, காந்தி மண்டபத் துக்கு விடு...' என்றதும் அது எங்கே இருக்குங்க...' என்று கேட்டான் அவன். எனக்குத் துரக்கிவாரிப் போட்டது. இந்தியாவில் இவ்வளவு வேகமாகக் காந்தியை மறந்து விட்டார்களா ?’ என்றேன். -- ‘ஓ ! கிண்டிலே கீதே அத்தைச் சொல்றியா...?’ என்று சிரித்தான், டாக்ஸி டிரைவர். - என் இதயத்தில் கங்கை வறண்டது. குருதி வடிந்தது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் இந்தப் பதினைந்து ஆண்டுகளில் தன்மொழி, தன்தேவை, தன்பிரச்னைகள், என்று மட்டுமே கவனிக்குமளவிற்கு மனப்பான்மையால் சுருங்கியிருப் பதைப் பத்திரிகைச் செய்திகள் எனக்கு உணர்த்தின. தேவை யானுல் புதிய மாநிலங்களைப் பிரிப்பதற்குப் போராடும் மனநிலை கூடச் சில பகுதிகளில் இருப்பதாகத் தெரிந்தது. ஜனத்தொகையைக் குறையுங்கள்! ப்ளான் யுவர் ஃபேமிலி, என்ற குடும்பக் கட்டுப்பாடு விளம்பரங்கள் எங்கும் தென் பட்டன. சென்னையில் இருந்தபோது நான் ஒரு தமிழ் சினிமாப்படம் பார்த்தேன். அதில் மதுரையைச் சேர்ந்த கதாநாயகன் கும்ப கோணத்தைச் சேர்ந்த மாலதியைத் திருச்சி கல்லூரியில் படிக் கும் போது காதலித்து சேலம் ஏர்காட்டுக்கு எக்ஸ்கர்ஷன் போகிறபோது ட்விஸ்ட், கோ, கோ. முதலிய நடனங்களே ஆடிக் கொண்டே மலையேறுவதாக வருவதற்குள் இடைவேளை வந்து விட்டது. அதற்குமேல் நானும் எழுந்து வந்துவிட்டேன். ஒரு வேளை இடைநேரத்திற்குப் பின் இன்னும் என்னென்ன வருமோ? என் தேசத்துப் படங்களில் என்னுடைய மண்ணின் பழக்க வழக்கங்களோ, நடையுடைபாவனைகளோ இல்லை என்பதற்காக நான் வெட்கப்படத்தானே வேண்டும்? மறுபடியும் அன்று பாங்காக்கில் அந்த யூதன் கூறிய வாக்கியம் என் செவிகளில் ஒலித்தது. - x. . . . . . . ' ' யார் கண்டார்கள்? உங்கள் கங்கை ஒருவேளை இப்போது வற்றிப்போனலும் போயிருக்கலாம் இரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் என்ைேடு ஒரு பார்லிமெண்ட் உறுப்பினர் பயணம் செய்தார். .