பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 கங்கை இன்னும் வற்றிவிடவில்லை ஒங்கோலில் டிபன் வரவழைத்துச் சாப்பிடும்போது இருவரும் மெல்ல அறிமுகமாளுேம். நான் பாங்காக்கிலிருக்கிறேன் என்று தெரிவித்ததும் அவர் சிறிது நேரம் பிரியமாக உரையாடினர். பாங்காக்கில் உள்ள நைட் கிளப்புகளைப் பற்றி ஆர்வமாக விசாரித்தார். அமெரிக்காவில் டாப்லெஸ் கூடாது என்கிருர் களாமே?' என்று வருத்தப்பட்டார். இந்தியாவைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள். நான் மிக வும் ஆவலாயிருக்கிறேன்...' என்றேன். இந்தியாவைப் பற்றியா? இந்தியாவிலே பேசறதுக்கு ஒரு மண்ணுமில்லே ! ஒவ்வொரு நாடா உணவுக்கு கப்பரை ஏந்திக் கிட்டிருக்கோம்...' என்ருர் அவர். எங்கள் இரண்டு பேரைத் தவிர எதிர்த்த வரிசையில் ஒரு கர்ப்பிணி தன்னுடைய பத்து வயதுச் சிறுவனுடன் அமர்ந்திருந் தாள். அடுத்து கெளபாய் சூட்டில் ஓர் இளைஞன். அவன் கையில் ஒரு ஃபிலிம்பேர் பத்திரிகை. அதைச் சுவாரஸ்யமாகப் படித்துக்கொண்டிருந்தான் அவன். படிக்காத நேரங்களில் கையோடு கொண்டு வந்திருந்த டிரான்ஸிஸ்டரை மெதுவாகத் திருகி இசையை இரசித்தான் அவன். கர்ப்பிணியோடு பேச்சுக் கொடுத்ததில் அவள் நாக்பூர் போக வேண்டுமென்று தெரிந்தது. மகாராஷ்டிரப் புடவைக் கட்டுக் கட்டியிருந்தாள். ஆங்கிலம் அவளுக்குச் சரளமாகப் பேச வந்தது, கெளபாய் சூட் பையன்-ஏதோ வெளிநாட்டு ஸ்காலர்ஷிப் பிற்காக டில்லியில் ஒரு இண்டர்வ்யூவுக்குப் போவதாகக் குறிப் பிட்டான். சென்னையில் ஏதாவதொரு பணக்காரக் குடும்பத் தைச் சேர்ந்தவனயிருக்க வேண்டுமென்பதை அவன் தோற்றம் சொல்லியது. - விஜயவாடா வருவதற்குள் அவன் என்னிடம் ஒரே ஒருமுறை தான் ஒரு கேள்வி கேட்டான். - அது வருமாறு : 'பாங்காக்லே டெரிலீன் ரொம்ப சீப்பா கிடைக்கு மில்லே...?’ என்பது தான் அந்தக் கேள்வி. விஜயவாடா வந்ததும் மற்றேர் அதிர்ச்சி காத்திருந்தது. விஜயவாடா ஸ்டேஷனில் கலவரம் வலுத்திருந்தது. ஸ்டேஷனில் ஒரே சூன்யம். ரெஸ்டாரெண்ட்” மூடிக்கிடந்தது. கடைகள் எதுவும் இல்லை. பிளாட்பாரத்தில் சோடாபாட்டில்கள் உடைந்து