பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{}& கங்கை இன்னும் வற்றிவிடவில்லை என்ருலும் ஸ்டேஷனைச் சுற்றி ஒரே இருட்டு. எதுவும் தெரிய வில்லை. அந்த நிலையில் போகவும் முடியாது. சோர்வோடு வண்டியில் வந்து உட்கார்ந்தேன். கெளபாய் சூட் மேல் பெர்த்தில் படுக்கை விரித்துக் கொண்டிருந்தான். கர்ப்பிணி பயங்கலந்த குரலில் ஆங்கிலத்தில் உணவுக்கு வழியுண்டா ? . என்று கேட்டாள். ஒன்றும் சரியாயில்லே. எதுவும் கிடைக்காது போலிருக் கிறது ! ஊருக்குள்ளும் போக வழியில்லை...' என்றேன். " நாக்பூரில் இந்தப் பையனின் அப்பா ஒரே கவலையாயிருப் பார். தகவலும் தெரிவிக்க முடியாது...” “ கவலைப்படாதீர்கள் ! எல்லாம் சரியாகிவிடும். விடியட்டும்! பார்க்கலாம் ! விடிந்தது ஆல்ை எங்களுக்குத்தான் ஒரு வழியும் விடிய வில்லை. - - கார்டிடம் கேட்லாம் என்ருல் கார்டையே காணவில்லை. இரயிலில் பல போகிகளில் ஆட்களே இல்லை. இறங்கிப் போய் விட்டார்கள் போலிருக்கிறது. என் பசி, என் எதிரே இருந்த கர்ப்பிணியின் பசி, குழந்தை யின் பசி, எல்லாமாகச் சேர்ந்து என்னைக் கவலைப்படச் செய்தன. எனது தாய் நாட்டிலா இப்படி நிகழ்ச்சிகள் ? அந்த யூதன் அன்று கூறியது மீண்டும் நினைவுக்கு வந்தது. "உனது தேசத் தில் இப்போது கங்கை வற்றிலுைம் வற்றியிருக்கலாம்...' ஆம் கங்கை வற்றித்தான் போயிருக்க வேண்டும். நான் சோர்ந்து உட்கார்ந்துவிட்டேன். கர்ப்பிணி சுருண்டு. படுத்து விட்டாள். அவள் பையனும் துரங்கிவிட்டான். - கெளபாய் சோப் டவல் சகிதம் பாத்ருமுக்குள் நுழைந் தான். - • , அடுத்த இரவும் விடிந்துவிட்டது. நான் இரயிலிலிருந்து இறங்கி நடக்கவும் சக்தியின்றியிருந்தேன். கர்ப்பிணியின் பையன் பெரிதாக அழுது கொண்டிருந்தான். அவளுடைய கண்களும் பஞ்சடையத் தொடங்கியிருந்தன. டில்லிக்கும் ஹரித்துவாருக்கும் போகும் ஆசை இப்போது எனக்கு இல்லை. எப்படியாவது அந்தக் கர்ப்பிணிக்கு உணவு வாங்கிக் கொடுக்க வேண்டும். அந்த ஆசை நிறைவேறிஞலே போதும்.'