பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 303 நடுப்பகலில் சில ஆட்கள் ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக வந்து, ' இரயில் இன்னும் இரண்டு நாட்களுக்குப் புறப் படாது ! சென்னைக்குக் திரும்பப்போகிறவர்கள் யாராவது இருந் தால் தலைக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து லாரியில் போக லாம்...' என்ருர்கள். கெளபாய் சூட் உடனே புறப்பட்டு விட்டான். நீங்கள் வரவில்லையா ? என்று என்னைக் கேட் டான். நான் கர்ப்பிணியின் முகத்தைப் பார்த்தேன். அவள் பிதியோடிருந்தாள். கெளபாய் ஐம்பது ரூபாய் கொடுத்து லாரிப் பயணம் புறப்பட்டுப் போய்விட்டான். இரயிலில் விளக்குகள் எரியவில்லை. பாத்ரூமில் தண்ணீர் வருவது நின்றது. மூன்ருவது நாளும் விடிந்து விட்டது. காலையில் யாரோ சமூக சேவகர்கள் உணவுப் பொட்டலம் கொண்டு வந்து வழங்கினர்கள். ஒரே கூட்டம். கர்ப்பிணி நைப்பாசையோடு கீழே பிளாட்பாரத்தில் இறங்கி நின்ருள். ' கூட்டத்தில் நீங்கள் போக வேண்டாம் ! நான் வாங்கி வருகிறேன், என்று விரைந்தேன். மூன்று நாட்களாகப் பசித்த கூட்டம் முண்டியடித்துக் கொண்டு நின்றது. சிலர் உணவுப் பொட்டலங்களைக் கொடுப்பவர் வழங்கு முன் தாமாகவே புகுந்து சூறையாடினர். நாகரிகமடைந்த நாடு களில் இப்படி வேளைகளில்கூட க்யூ வில் நிற்பார்கள். இங்கே ஏது அந்த நல்ல வழக்கம் ? இடி மிதி பட்டது தான் மிச்சம், என்னல் உணவுப் பொட்டலம் வாங்க முடியவில்லை. என் நெஞ்சு வறண்டது, என் இதயத்திலிருந்த கங்கை ஏற்கெனவே வறண்டிருந்தது. நான் வெறுங்கையோடு தலைகுனிந்தபடியே அந்தக் கர்ப் பிணிக்கு முன் போய் நின்றேன். அப்போது அந்தப் பாதை யாகத் தலைக்கு மேல் தலையை விடப் பெரிய முண்டாசு கட்டிய ஒரு முரட்டுத் தெலுங்கர் தாம் சிரமப்பட்டு வாங்கிய உணவுப் பொட்டலத்துடன் தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந் தாா. அவர் கர்ப்பிணியைப் பார்த்ததும் தயங்கி நின் ருர், தெலுங்கில் ஏதோ கேட்டார். எங்களுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. பேசாமல் தன் கையி லிருந்த உணவுப் பொட்டலத்தை அக்கர்ப்பிணியை நோக்கி நீட்டினர். அவள் வாங்கிக் கொள்ள மறுத்தாள், பையனிடம் கொடுத்துவிட்டு அந்த முரட்டுத் தெலுங்கர் மறுபடி உணவு கொடுக்கும் இடத்தை நோக்கி நடந்தார்.