பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 கங்கை இன்னும் வற்றிவிடவில்லை பாவம் ! யாரோ பரோபகாரி கொடுத்து விட்டுப் போகிரு.ர். சாப்பிடுங்கள் அம்மா! பையனுக்கும் கொடுங்கள் ! நான் போய்த் தண்ணீர் கொண்டு வருகிறேன்...' என்று புறப்பட்டேன். தண்ணீர் பிடித்துக் கொடுத்த பின், “நீங்களும் கொஞ்சம்...” என்று அந்தப் பொட்டலத்தைப் பங்கிடத் தொடங்கிய அவளே மறுத்து, ' நான் போய் மறுபடி முயன்று வாங்கிக் கொள்ள முடியும், இதைப் பங்கிட்டால் ஒருவருக்கும் காணுது...' என்று கூறிவிட்டுப் பொட்டலம் வழங்கும் இடத்தை நெருங்கினேன். அங்கே அசாதாரணமான அமைதி நிலவியது. இரண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கூட்டத்தை விலக்கிக் கொண்டு புகமுயன்றேன். யாரோ இரண்டாவது தடவை உணவுப் பொட்டலம் வாங்க முயன்ருளும். முதல் முறையே உணவு கிடைக்காத கோபக்காரன் ஒருவன் பக்கத்தி விருந்த ஸ்டேஷனின் மணியடிக்கும் இரும்புத் தண்டினல் இரண்டாம் தடவ்ை வாங்க வந்தவனின் மண்டையைப் பிளந்து விட்டான். அங்கே போகாதீர்கள் வீண் வம்பு என்ருர் ஒருவர். எட்டிப் பார்த்தேன். ஆம் ! அந்தப் பெரிய தலைப்பாகையோடு கூடிய முரட்டுத் தெலுங்கர்தான் இரத்தம் ஒழுக விழுந்து கிடந்தார். தலைப் பாகை விலகிச் சிறிது தொலைவு தள்ளிக் கிடந்தது. மண்டை யிலிருந்து குருதி பெருகித் தரையை நனத்துக் கொண்டிருந்தது. என் உடல் நடுங்கியது. கண்கள் நீரைச் சிந்தின. ' எனது தேசத்தில் கங்கை இன்னும் வற்றிவிட வில்லை ! அதை நான் ஹரித்துவாரம் வரை போய்த் தெரிந்து கொள்ள வேண்டியது அநாவசியம். இதோ பெருகி வருகிறதே இந்த ஏழை விவசாயியின் குருதி இதுவே கங்கைதான் ' என்று எனக்குள் முனு முணுத்துக் கொண்டேன் நான். நான்காவது நாள் விடிந்தபோது என்னுடைய விடுமுறை நாட்கள் மிக மிகக் குறைந்து விட்டன. நான் பாங்காக் திரும்ப மட்டுமே போதுமான நாட்கள் இருந்தன. எனவே நான் விஜயவாடாவிலேயே இறங்கிப் பயணத்தை ரத்துச் செய்து சென்னை திரும்பிவிட்டேன்: கார்டிடம் அந்தக் கர்ப் பிணியையும் குழந்தையையும் ஒப்படைத்துவிட்டுத் தெற்கே புறப்பட்ட முதல் இரயிலில் நான் சென்னை வந்தேன்.