பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 வாசவன் ’’ 29 மடவார்ப் பொறை னெக்கும் இந்த உலகத்துக்கும் ஐம்பத்துமூன்று வருஷத் தொடர்பு உண்டு. இரண்டு உலக மகாயுத்தங்களும் எனக்குப் பின் தோன்றிப் பிரபலமடைந்தவை. வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை வாழ்த்துவோம்-முடிதாழ்த்துவோம் எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல் ஈனமோ ?-அவ மானமோ ?” என்று சுதந்திர முழக்கமிட்ட உண்மைக் காங்கிரசையும், உண்மைத் தலைவர்களையும், சென்னையில் காந்திஜி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கப் பிரசாரத்தையும், ஒத்துழையா மையை விடுதலைக்குரிய பெரும் போராக நடத்திய ராஜாஜி யின் சூருவளி இயக்கத்தையும் நான் நேரடியாகக் கண்டவன், காங்கிரஸின் உயிர் மூச்சான விடுதலை கிடைத்துவிட்ட பிறகு அதற்குப் புத்துயிர் ஊட்டத் தலைவர்கள் நிலவரம்பு, சோஷலிஸம் என்றெல்லாம் தடுமாறிக் கொண்டிருப்பதையும் கண்டு இன்னும் குருடாகாமல் இருப்பவன். ஒரு கட்சியை எப் பொழுதும் சக்தி வாய்ந்ததாக வைத்துக்கொண்டிருக்கப் பெரும் பாலானவர்களின் ஆசைகளை, கனவுகளே அதற்கு ஆதாரமாகக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். பெரும் தலைவர்கள்கூட இந்த உணவுக்கொள்முதலில் மட்டாக வியாபாரிகளாக நடத்து கொண்டு வருவதையும் பார்த்தபடிதான் இருக்கிறேன். எத்தன கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா! உணர்ச்சிக் கவிஞன் கண்ட உலகையும், அதிலே நிறைந்த கோடானு கோடி இன்பங்களையும் எனக்குக் காட்டாமல் விட்டது.