பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசவன் 3.07. இந்தக் காங்கிரஸ்தான். இதை எதிர்க்கட்கிக்காரன் குறைகூறும் விதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரே குடும்பத்தில் புதுத் தலைமுறை ஒன்று கிளேத்துப் படர்ந்துவிட்ட பிறகு, இதன் நல்வாழ்வுக்காகத் தியாகம் செய்த முன் தலைமுறையின் முனு. முணுப்பு என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும், நான் ஐந்தாவது பாரம் படித்துக் கொண்டிருக்கும்பொழுதே காங்கிரஸ் என்ன வலைப்போட்டுப் பிடித்துவிட்டது. சத்திய மூர்த்தியின் கனல் உரையும் ராஜாஜியின்தீர்க்க தரிசன வாசக மும், சீனிவாச சாஸ்திரியாரின் மாணவர்கள் கல்விக்கூடங் களைத் துறப்பார்களா ? என்ற கேள்வியும், சர்தார் படேல், ஜம்னலால் பஜாஜ், மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் ஆகி யோரின் சுதந்திர முழக்கமும் என்னை ஒரு விடுதலை வீரளுக்கி விட்டன. உங்களுக்குச் சந்தேகம் எதற்கு சாஸ்திரியாரே? இதோ கல்விக் கூடத்தைத் துறந்து விட்டேன் என்று நான் கூறியபோது, தலைவர்களே அயர்ந்து விட்டார்கள். அதற்குக் காரணம் உண்டு. அரசியல் சூழ்நிலை உருவாகிய ஆரம்பக் காலம் அது. சுதந்திரக் கனல் உள்ளத்தில் எழுந்தாலும் அதை வெளி யிட்டு வெள்ளைக்காரனை எதிர்க்கப் பெரும்பாலான மக்கள் தயங் கினர் பதினேந்து வயதுப் பையன் அந்த நிலையில் நாட்டு விடுதலைப் போரில் குதிப்பதென்பது சாமான்யமா ? .

ஒத்துழையாமை இயக்கத்துக்குத் தமிழ் நாட்டில் தொண்டர் களைச் சேர்ப்பதற்கு தான் ஒரு விளம்பரப் பலகையாக இருந் தேன். பால் வடியும் என் முகத்தைக் காட்டி, பாலகன் குதித்து விட்டான் பாரத விடுதலைப்போரில், பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா இன்னும்?' என்று தலைவர்கள் விடுத்த வேண்டு கோளுக்குப் பலன் இருந்தது. சுதந்திர வேள்வியில் வீறுகொண்டு குதித்தவர் ஆயிரமாயிரவர். இத்தனை சின்ன வயதில் பூமாலையும் புகழுரையும் கிடைப் பது என்ருல் எத்தனை பெரிய விஷயம் ? என் உள்ளமெல்லாம் ஒரே மகிழ்ச்சி. - - - -- - என் அப்பா ஒரு தாசில்தார். வெள்ளே அரசாங்கத்தின் பரம பக்தர். அவர்தான் தலையில் அடித்துக்கொண்டு என்னையும் தடிகொண்டு தாக்கினர். மகனுடைய தேச பக்தியால் தந்தை யின் ராஜ விசுவாசம் சந்தேகிக்கப்படுமோ என்ற பயம். அதனல் என்னை அறைக்குள் அடைத்து வைத்தார். சிறு கதவுதான கொழுந்துவிட்டு எரிந்த என் சுதந்திரக் கனலே அணைத்து மறைத்து விட முடியும்? குடும்பத்தை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து, எங் கள் இயக்க வானத்திற்குப் பறந்து போய்விட்டேன்.