பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 & மடவார்ப் பொறை அப்பொழுதெல்லாம் காங்கிரலை யாரும் பொழுதுபோக்கு மண்டபமாக நினைத்தது கிடையாது. பெர்மிட் லாபங்களுக் காகக் கதர்க்குல்லாயை மாட்டிக்கொண்ட கள்ளச் சந்தைக்காரர் கள் இல்லை. சர்வபரித் தியாகம் செய்யத் துணிந்த சத்திய சீலர்களே அங்கு இருந்தனர். அவர்கள் சிந்தை நாட்டு விடுதலை’ என்ற ஒன்றைத் தவிர வேறேதும் கொள்ளவில்லை. லெளகீக வாழ்க்கையின் சபலம் சுதந்திரக் கனவில் எரிந்து ஸ்புடமாகிய மனிதர்கள்தான் காங்கிரஸ் தொண்டர்கள், நானும் அவர்க வளிலே ஒருவன். -- - கொடி பிடித்தோம்; கோஷம் எழுப்பிளுேம். தொண்டு செய்யும் அடிமை-உனக்குச் சுதந்திர கினைவோடா ? பண்டு கண்டதுண்டோ? அதற்குப் பாத்திரமாவாயோ?” என்று வெள்ளைக்காரன் கேட்டான். கேட்ட தோடா நின்ருன் ? தடியால் அடித்தான்; தாங்கிக்கொண்டோம். ஆனல் பின் வாங்கிளுேமில்லை. உப்பு எடுத்தோம் ! சிறைபட்டோம். வெள்ளைச் சிங்கத்ததைத் துரத்த அடிமை நாய் களை வில்லும் வேலும் வாளுமாகத் தயாரித்தோம். அத்தனையும் அஹிம்சை உலையில் வார்க்கப்பட்டவை. இதைத் தவிர மனித வாழ்க்கையின் அனுபவ ஏடுகள் எதை யும் நாங்கள் புரட்டிப் பார்த்ததில்லை. ஆனல் வாலிபம் என் ளிைடம் ஏடு புரட்டிப் பார்த்தது. பருவ உணர்ச்சிகளுக்குத் தீனி போடாத கல் நெஞ்சனக நான் இருந்தாலும் எங்கள் தலைவர் சத்தியமூர்த்திக்கு என்னைப் பற்றிய பயம் வந்து விட்டது; * இந்தப் பயலே ஒரு குட்டி மயக்கிக் கூட்டிப் போய்விட்டால் நாம் நல்லதொரு தொண்டனே இழந்து விடுவோமே!’ என்ருர், என் பாரதத் தாயைச் சிறை வைத்துவிட்டு, நான் குஷா லாகக் குடும்பம் அமைத்துக்கொள்வதா? அவள் விடுதலை அடை யும் வரை நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று வீராவேசத்தோடு கூறினேன். - - உன் ஆயுளில் விடுதலை சாத்தியமில்லாவிட்டால்? 'எனக்குத் திருமணமும் சாத்தியமில்லை. சத்திய மூர்த்தியடா நான் பொய்யாக்கிளுயோ பழி வாங்கிவிடுவேன்!! என்று சிரித்துக்கொண்டே, என் முதுகில் தட்டிக்கொடுத்தார் -

  1. # * - 1947-இந்தியத் தாய் அடிமை விலங்கு அறுபட்டு, சர்வாலங்கார பூஷணியாய்த் தன் நாற்பது கோடி மக்களுக்குக்