பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசவுன் 309 காட்சி அளித்தாள். இந்தப் புனிதக் கோலத்தைக் காண்பதற் காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த எங்கள் மோதிலால் இல்லை; சித்தரஞ்சன தாஸ் இல்லை; ஜம்னலால் பஜாஜ் இல்லை; சத்தியமூர்த்தியும், சாஸ்திரியாரும் இல்லை. அடிநாளில் உழைத்த பல்லாயிரக் கணக்கானவர்களில் சில ஆயிரமவரே இருந்தோம்: காந்தி அடிகளார். சுதந்திரம் வாங்குவதற்காக உதயமான காங்கிரஸின் லட்சியம் பூர்த்தி அடைந்துவிட்டது. இனிக் கட்சியைக் கலைத்து விடலாம் என்று கூறிய பிறகும் கட்சியை யாரும் கலைக்கவில்லை. ஆனல் என்னைப்போன்ற உண்மைக் காங்கிரஸ்காரர்களில் பலர் கட்சியை விட்டு விலகினர். நான் எனக்கு முற்றிலும் புதியதான மனித வாழ்க்கைக்குத் திரும்பி னேன். வயதோ நாற்பத்து இரண்டு வாழ்க்கையில் செங்கணிப் பக்குவம் ஏறவேண்டிய வயதில், வாழ்க்கையின் அரிச்சுவடியைக் கற்கும் பிள்ளைப் பிராயத்தவய்ை மாற முடியுமா? காரியத்திற் காகச் சிரிப்பதும், போலித்தனமாகப் பழகுவதும், உணர்ச்சி மயமான வாழ்க்கையில் துறவியைப்போலப் போடும் வேஷமும் எனக்கு வெறுப்பை அளித்தன. ஒரு சோற்றுக் குழியை மூட மனிதன் செய்த முயற்சிகளில் எத்தனை பெரிய தோல்விகள் ! இவன் கண்டுபிடித்த இயந்திரம் இவனைவிடச் சக்தி வாய்ந்தது. இவன் தரையில் நின்ருல் இவன் கண்டுபிடித்த விமானம் உயரே பறக்கிறது ! இவன் ஒரு சாதா ரண மனிதனுக இருந்துகொண்டு, தன் முயற்சிகளுக்கு ராட்சச பலத்தைக் கொடுக்கலாமா ? காரியங்கள் விஸ்வரூபம் பெற்று விட்டால் காரணங்கள் கடுகாகத் தேய்ந்து அழிந்து போகின் றன; காரணமான மனிதனும் காரியமான அவன் முயற்சியும் அம்மாதிரியானவைதாம். மனிதன் சிறுத்துக்கொண்டு வருவதன் அறிகுறிகள் இவை. சாதனைக்குச் சக்தியைக் கொடுத்துவிட்டு, மனித தத்துவம் மரணமாகிற அலங்கோலம் இது தன் சாதனை யின் உயரத்துக்குக் கீழே தனித்து நிற்பவன், 'வெற்றி, வெற்றி ' என்று வீற்றுவது பைத்தியக்காரத்தனம்; - நாம் மனித உலகிலே வெறுப்புக்கொண்டாலும், அதன் அளவுக்கு இறங்கி வந்திருப்பவன் தானே? மண் மூடிக்கிடந்த மனத்திலே சபலம், பாசம் என்றெல்லாம் முளைகள் விட்டன. எந்தையும் தாயும் நினைவுக்கிளை வழியே உள்ளத்தில் இறங்கினர். ஊருக்குப்போனேன். அம்மா எத்தனையோ வருஷங்களுக்கு முன்னல் என் பிரிவாலே வாடி இறந்துவிட்டாளாம். இதை யும் மனிதத்தன்மையின் தோல்வி என்றுதான் சொல்ல வேண் டும். தன் ஆணிவேரைப் பறித்து என்னிடத்தில் ஊன்றி வைத் தாள், ஆணி வேர் பிடுங்கிக்கொண்டு போனதும் மரம் சாய்ந்து