பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 ம.வார்ப் பொறை இரண்டு; இரண்டில்லை, ஒன்று. ஒன்றும் மற்ருென்றும் அலை யாய், புயலாய், ஆழிசூழ் உலகின் இரு கரைகளாய்த் தோன்றித் தோன்றி என்ன வதைத்துக்கொண்டிருந்தன. ' என்னை நீங்கள் வரச் சொன்னீர்களாம். உங்களை மணந்து கொள்ள எனக்குப் பூரண சம்மதம். எதாலும் நிர்ப்பந்திக்கப் படாத என் சர்வ சுதந்திரமான விருப்பம் இது நீங்கள் உடனே முகூர்த்தத்திற்கு நாள் பார்த்துவிடலாம் ’’ என்று என் மெளனத்தைக் கலைத்தாள். என் மனத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த கேள்விக்களுக்கெல் லாம் மொத்தமாகப் பதில் அளித்துவிட்டாள். ஆனாலும் என்னைத் தேக்கிக் கொண்டிருந்த சந்தேகம் சொல்லால் விரிந்தது, "நான் வயதானவன். ' . ' நானும் பதினறு வயதுக் குமரி இல்லையே!” இப்பொழுது அவள் எனக்கு முழுதும் ஒரு பெண்ணுகவே தெரிந்தாள். எனக்கு மகிழ்ச்சி விருத்தாகியது. உலகமே தெரி யாத பதினறு வயதுப் பெண்ணின் பேதமையைவிட, சற்று வயதானவளின் அநுபவக் கூர்மை என் தயக்கத்தையும், சிரமத் தையும் குறைக்கும் அல்லவா? அடுத்த வாரமே முகூர்த்தம் ' என்றேன். " நீங்கள் வித்தியாசமாக நினைக்காவிட்டால் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ' "தாராளமாகச் சொல்லலாம். ' ' என்னைப் போலவே என் தங்கை கல்யாணத்திற்கு நிற்கிருள். அவளுக்கும் ஒரு வகை உங்களால் பிறந்தால் அவள் மனத்தில் வரித்தவனைத் தடையின்றி அடைவாள். இந்தக் காரியத்தை என்னுடைய விலையாக நினைப்பதென்ருல் வேண்டாம் , அதை ஒரு மனிதனின் உயர்ந்த சேவை என்றே நினைக் கின்றேன். நாளைக்கே உன் அப்பாவிடம் ரூபாய் ஐயாயிரம் தந்துவிடுகிறேன். ' 'நீங்கள் உயர்ந்தவர், ' 'உன்னை விடவா? " அவள் தடுமாறினள். நான் அடுத்த வாரத்தைப் பற்றிச் சிந்தித்தேன். 황 警 笼 வரம் வந்தது. ஆடம்பரம் இல்லாத எங்கள் கல்யாணம் அமைதியாக நடத்து முடிந்தது.