பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசவன் 313 அன்றிரவு ஐம்பத்து மூன்று வருஷங்களாக உறைந்து கட்டப் பட்டுப் போயிருந்த சுகத்தைத் தேடப் பள்ளி அறைக்குப் போனேன். சிறிது நேரத்தில் நிலவு பூக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். கதவு திறந்திருந்தது. நிலவு நுழைந்தது. அழகுப் பெட்டகமாய் வந்த சிவகாமி மஞ்சத்தைப் பிடித்துக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். பதறினேன், பற்றினேன் அவள் தோளே. என்ன சிவகாமி ! என்றேன் கலவரத்துடன், நான் உங்களை ஏமாற்றிவிட்டேன் ! புரண்ட வெள்ளம் இரு கண்களில் பாய்ந்தது. அவளுடைய நடுங்கிய உடல் என் கைகளில் தேங்கியது. பதைத்த என் உள்ளம் பாய்ந்தது. 'என்ன சொல்கிருய் சிவகாமி ? என்னை ஏமாற்றியைா ? ' ஆமாம் ; நான் உங்களுக்கு ஒரு மனைவியாக நடந்து கொள்ள முடியாது. நீங்கள் கொள்ளை ஆசையுடன் புதுப் பித்துக் கொண்டிருக்கும் வாலிப வேட்கைக்கு ஆறுதல் கிடைக்காது......' ஆசை வலை அறுத்த வேகத்தில் படுபாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் நான், ஏன்? ' என்று கீச்சிட்டேன். நான் தாம்பத்ய சுகத்திற்கு லாயக்கற்றவள். விவரமாகச் சொல்லப் போனல் பூப்படையாத பெண் நான். இயற்கையின் மலட்டுத்தனத்திற்குப் பெண் உருவம் தாங்கிய வெற்றுப் பிண்டம்...' சொல்லிவிட்டு என்னைப் பீதியுடன் பார்த்தாள். நடக்கக்கூடாத ஒன்று நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்க் கும் நடுக்கம் அவள் உடலில் இருந்தது. நான் அவள் எதிர்பார்ப்பதைப் போல அவளுடைய கழுத்தை அழுத்த வேண்டியவன்தான். ஆனல் எதிர்பாராத ஒன்று என்னே அடைத்துக்கொண்டு நின்றது. எல்லாம் இழந்த நிலையில் தளர்ந்து தள்ளாடும் குரல்தரன் நீந்தியது : “ எதற்காக சிவகாமி, என்னை வஞ்சித்தாய்? ' இதைப் போலத்தான் என்னை ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டேன்: இவர் ஏன் வயதான காலத்தில் பெண் உலகத்தை வஞ்சிக்கக் கிளம்பி யிருக்கிருர் ? என்று. பூப்படையாத நான் உங்களை வஞ்சித்துத் திருமணம் செய்து கொண்டு, வாழத் தகுதியுள்ள மற்ற ஒரு வாலிபப் பெண்ணைக் காப்பாற்ற எண்ணினேன். பெண் உலகத்துக்கு நான் செய்யும் பெரும். சேவை என்றும் இதை எண்ணினேன். நான் அருகிருந்து தகுதி இல்லாத ஆசைக்குத் தகுந்த தண்டனையாக உங்களை வாட்டிக் கொண்டிருக்க ஆசைப்பட்டேன். இதற்கு எங்கள் குடும்ப நிலை