பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 மடவார்ப் பொறை யும் ஒரு காரணம். எனக்குக் கூறிக்கொள்ள இயற்கைக் காரணம் ஒன்று இருந்தாலும், நான் திருமணம் ஆகாமல் இருப்பதைப் பலர் பழித்தனர்; சந்தேகித்தனர். இதனால் என் தங்கையும் கல்யாணமாகாமல், பிறருடைய ஏசலுக்கு ஆளாளுள். பணம் இருந்தால் அவளை எப்படியாவது தள்ளிவிடலாம். அது தான் எங்களை வஞ்சித்ததே ! என் கல்யாணத்தின் மூலம் என் பழிப்புக்கு விடுதலை தரவும், என் தங்கையின் கல்யாணத்திற்குப் பணம் கிடைக்கவும், வாழத் தகுதியுள்ள ஒரு பெண்ணே உங்கள் வலையில் விழாதிருக்கவும் வகை செய்ய எண்ணினேன். எல்லாம் நடந்தன. வெற்றி கிடைத்தது! ஆனல் பூரிக்க வேண்டிய என் மனம் பொங்கிக் குமைகிறது; உங்கள் பெருந்தன்மை வதைத்து உருக்குகிறது. அன்று நீங்கள் என்னைத் தனிமையில் சந்தித்த போது எத்தனை கெளரவமாக நடந்துகொண்டீர்கள்? தன் தந்தை இடத்தில் ஒரு மகளுக்குப் பெருகும் பாசம் அன்று எனக்கு உதயமாகியது. ஆனல் புத்தியில்லாத பெண்ணுக நடந்துகொண்டுவிட்டேன். மனித இயற்கையின் ஒர் ஆசை ஐம்பத்து மூன்று வருஷங்களுக்குப் பிறகு உங்களிடம் தலை தூக்கி யது. அந்த நியாயமான ஆசைக்கு நான் எவ்வளவு பெரிய தடுப்புச் சுவர் எழுப்பி விட்டேன்? ஐயோ, இந்தக் கொடு மைக்கு அணைபோட என் கண்ணிரால் முடியாதே? இத்தனை ஆசையுடன் காத்துக்கொண்டிருக்கும் உங்களைத் திருப்திப்படுத்த முடியாத பாவியாகிவிட்டேன்! ' என்று கதறினுள். 'நீ பாவி அல்ல, சிவகாமி! என்னைக் காப்பாற்றியிருக்கிருய் լ, என்ற என் கலங்காத குரலைக் கேட்டுக் கலங்கித் துடித்தாள் அவள், குலையாமல் இருந்த பழங்களையும், குடிக்காமல் இருந்த பாலை யும், வாடாமல் இருந்த மலரையும், கலையாமல் இருந்த படுக்கை யையும் பார்த்துச் சுளித்த விழிகளை, நீர்க்கோலமாய் நெளிந்து கொண்டிருந்த சிவகாமியிடம் திருப்பினேன். நான் மனிதனய்த் தான் பிறந்தேன். ஆனல் பின்னர் நாட்டு விடுதலை இயக்கத் தில் என் மனிதத்தனம் முழுதுமாகக் கரைந்துவிட்டது. இயக்கம் வெற்றி கண்டதும் நான் மனிதனுக்கப்பட்டு உணர்ச்சி நிறைந்த இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டேன். விடுதலைப் பசியில் அலைந்த என் உள்ளம் வேட்கைப் பசியில் நாட்டம்கொண்டு விட்டது. நான் நாயாக மாறினேன். நீ கல்லாக எறிந்தாய். கல்லெறி பட்டதும் என் தவறு புரிகிறது. காங்கிரஸ்காரன் அயோக்கியத்தனம் செய்கிருன் என்று பேசப்படும் இந்த நாளில் நான் ஓர் உதாரணமாக இருந்தேன். என்னை மீட்டு விட்டாய். என் பேதைமையால் நான் ஏற்றுக்கொண்ட சுமை யைக் கீழே தள்ளிவிட்டாய். எங்கள் தலைவர் சத்தியமூர்த்தி கனலாக எழுப்பிய ஒன்றைக் கனியாக மாற்றிவிட்டாய். நீ