பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெ. தூரன் 30 புதுக் 85.60)l கந்தப்பன் இப்பொழுது பெருங் குடிகாரனகி விட்டான். வீரப்பனேடு சேர்ந்துகொண்டு பழகிய இந்தக் கெட்ட குணம் அவனை இன்று இறுகப் பிடித்துக்கொண்டது. முதலில் தனியே குடிக்கப்போக அஞ்சுவான் ; அவன் கால்கள் கடைக்குள் எட்டி வைக்கக் கூசும் , "யாராவது பார்த்தால், மானம் போச்சே !' என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகும்! உண்மையில் வீரப்பன் இல்லாவிட்டால் அவன் அந்தப் பக்கமே போயிருக்கமாட்டான். இப்பொழுதோ கந்தப்பன் எந்த நேரத்தில் வேண்டுமானலும் கடைக்குள் நுழையப் பின் வாங்குவதில்லை. கந்தப்பன் பெருத்த குடிகாரகிைவிட்டான் என்பது கிராமம் முழுவதும் தெரிந்து விட்டது. சில வேளைகளில் அவன் குடிவெறியால் நடு வழியில் உருண்டு கிடப்பான். அப்போது அவனைப் பார்த்தவர்கள், ஐயோ! சூது வாது தெரியாத இவனும் சேர்க்கையால் இப்படிக் கெட்டு விட்டானே!' என்று இரக்கப்படுவார்கள். கந்தப்பன் செங்காளிபாளையத்தில் ஒரு பண்ணையாள்: கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு தன் மனைவி, இரு குழந்தை களோடு சுகமாக வாழ்ந்து வந்தான். ஊரில் எல்லோரும் அவனே, " அப்பாவி ' என்று புகழ்ந்து பேசுவார்கள். கந்தப்பனுக்குக் காலை முதல் மாலைவரையில் பண்ணைக்கார னுக்குத் திருப்தி ஏற்படும்படி வேலை செய்யத்தான் தெரியும். கூலியைத் தன் மனைவி வேலாயியிடம் கொடுத்து விடுவான்; தனக் கென்று அவன் ஒரு காசுகூட வைத்துக்கொள்ள மாட்டான். வேலாயி வீட்டுக்கு எஜமானி; குழந்தைகளோடு கொஞ்சுவதும்,