பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெ. தூரன் ვj 7 பகலெல்லாம் உழைத்துக் களைப்புடன் திரும்பிவரும் கந்தப்பனை உபசரிப்பதுந்தான் அவள் வேலை. கந்தப்பன் தன் மனைவியின் அமுத மொழிகளால் சலிப்பெல்லாம் நீங்கிக் களிப்புறுவான். புதன்கிழமை செங்காளிபாளையத்திற்குச் சந்தை நாள். அன்று ஒருவரும் வேலைக்குப் போக மாட்டார்கள். சில கூலிக் காரர் அன்று தான் தலையில் இரண்டு செம்பு தண்ணிர் ஊற்றிக் கொள்வார்கள் ; வேலாயி அதிகாலையிலேயே தன் கணவன், குழந்தைகளை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் செய்து, பின்பு தானும் எண்ணெய் தேய்த்து முழுகுவாள். சூரியன் உதயமாக ஆக இன்பக் குடும்பம் தூய ஆடை உடுத்துக்கொண்டு, கற்பூரம் ஊதுவத்திகளோடு கோவிலுக்கு வந்துவிடும் , அவ்வூரில் சிவன், விஷ்ணு, மாரியம்மன் கோயில்கள் பக்கம் பக்கமாகவே இருந்தன. அவர்களுக்கு எல்லாம் கடவுள்தான்: சைவம், வைணவம் என்ற பெயரே தெரியாது. அவர்கள் மூன்று கோவி லுக்கும் சென்று வணங்குவார்கள்; கந்தப்பனுக்குக் கற்பூர ஆராதனை நடக்கும்போதும், மணிச் சத்தங் கேட்கும் போதும் கண்களில் நீர் பெருகிவிடும், வேலாயி, ' என் கண்ணுட்டிகள் (கணவனும், பிள்ளைகளும்) சுகமாக இருக்க வேண்டும் ' என்று மனமாறத் தொழுவாள். மாலை வேலாயி சந்தைக்குச் சென்று வீட்டுக்கு வேண்டிய செலவும் பிள்ளைகளுக்கு மிட்டாயும் கந்தப்பனுக்குக் கரும்பும் வாங்கி வருவாள். கந்தப்பனுக்குக் கரும்பைவிட அவள் அன்பே அதிகமாக இனிக்கும். ஆனல் இவையெல்லாம் குடிப் பேய் பிடிப்பதற்கு முந்திய நிகழ்ச்சிகள். இப்பொழுது எல்லாம் மாறி விட்டன. கந்தப் பனுக்குக் குடிப்பதற்கே கூலிப்பணம் கட்டுவதில்லை. வீட்டில் ராகிகூட இருக்காது; அதைப்பற்றி அவன் கவலைப்பட மாட்டான்; சில சமயம் வேலாயி, இரண்டளுவாவது கொடுக்கும் படி கெஞ்சுவாள். குடி மயக்கம் இல்லாவிட்டால் கந்தப்பன், * இந்தா' என்று கொடுப்பான்; குடிமயக்கமாயிருந்தால் வேலாயிக்கு அடிதான் கிடைக்கும். இன்பம் குடிகொண்டிருந்த அக் குடும்பத்தில் வறுமை புகுந்துவிட்டது. வேலாயி உடல் மெலிந்து களையிழந்து வாடி விட்டாள். வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் விற்ருய் விட்டது. குழந்தைகளுக்குச் சரிவரச் சோறு போடுவதே இப் பொழுது முடிவதில்லை. 警 * °發 . ஒரு நாள் மாலை பண்ணைக்காரன் கந்தப்பனிடம் நூறு ரூபாய் கொடுத்துப் பக்கத்து ஊரில் ஒருவனுக்குக் கொடுத்து