பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 | 8 புதுக் கடை வரும்படி சொன்னன். கந்தப்பன் போகும் வழியில் ஒரு கள்ளுக் கடை இருந்தது. அவன் அன்று காலை முதல் கையில் காசு இல்லாததால் குடிக்கவில்லை. கடையைக் கண்டதும் கந்தப் பனுக்குக் கால் அங்கே இழுத்தது. சற்றுநேரம் தயங்கினன், பண்ணைக்காரனுக்குத் தெரிந்தால் அப்புறம் வேலைக் கு வரவேண்டாமென்று சொல்லி விடுவானே என்ற பயமும் உண்டாயிற்று உம் நாலணுவுக்கு குடித்துவிட்டுப் பிறகு யாரிடத்திலாவது வாங்கிக் கொடுத்துவிட முடியாதா?’ என்ற எண்ணமும் நடுவே தோன்றியது. இதற்குள் அவன் கடைக்குப் பக்கமாக வந்துவிட்டான். ' கந்தப்பா வா வா, உன்னைப் பத்தித்தான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருந்தேன் ' என்று கடையில் உட்கார்ந்து கொண்டிருந்த வீரப்பன் கூப்பிட்டான்; ' எங்கே, இப்படி இரண்டு கொண்டா ; டேய் சாக்களு !' என்று கூவினன் வீரப்பன், பண்ணைக்காரன் கட்டளை பறந்து விட்டது. கந்தப்பன் தன் நண்பனேடு சேர்ந்து குடி குடி யென்று குடித்துவிட்டான். கந்தப்பன் தள்ளாடிக் கொண்டு நடக்கிருன். எந்தப் பக்கம் போகிருன், ஏன் அங்கே போகிருன் ? ஒரு நிதானமும் இல்லை. பாதையை அளக்கிருன் . முகத்தில் களிப்புப் பொங்கு கிறது; ஒரு சிறு தெம்மாங்கு அவனே அறியாது வாயிலிருந்து கிளம்புகிறது. கடையைவிட்டு ஒரு காடுகூடத் தாண்டவில்லை. அதற் குள்ளேயே கந்தப்பனுக்குக் கால் நிலத்தில் பாவவில்லை. அப்படியே திண்டாடி ஒரு கள்ளிப் புதர் அருகில் பொத்தென்று விழுந்தான். கெட்ட நாற்றத்தோடு அவன் வாயிலிருந்து கள் வழிந்தது. வேட்டி சரியாக இடுப்பில் இல்லை , மடிப்பையைக் காணுேம். - மறு நாள் காலை : கதிரவளுேடு தூங்கிக் கதிரவனோடு விழிக் கும் பறவைகள் தங்கள் இணையுடன் உல்லாசமாகப் பேசிக் கொண்டிருக்கின்றன ; இன்துயில் நீங்கிப் புத்துயிருடனும் புது மகிழ்ச்சியுடனும் மரத்துக்கு மரம், கிளேக்குக் கிளை பறந்து திரி கின்றன. இயற்கைத்தேவி அருளிய மந்த மாருதத்தில் நீந்தி, உணவைத் தேடி உண்டு, ஊறும் தீஞ்சுவைத் தண்ணீரைப் பருகி வாழும் அப்பறவைகளுக்கு அடக்க முடியாத, மயக்கந்தரும் களிப்பும் கிடையாது ; பின்பு அதனுல் ஏற்படும் தளர்ச்சியும் கிடையாது. மயக்கத்திலிருந்து தூக்கத்திற்குச் சென்று விழித்த கந்தப்பன் மிகுந்த குடியால் தளர்வுற்று அப்படியே படுத்துக் கொண்டு சற்று நேரம் இந்தக் காட்சியைக் கவனித்தான். அவனே அறியாமலேயே அவனுக்குச் சிரிப்பு வந்தது, புதிதாகத்